இறால் எக் ரைஸ்

Loading...

இறால் எக் ரைஸ்
தேவையானவை:

இறால் – கால் கிலோ (சுத்தம் செய்தது)
முட்டை – 3
வடித்த சாதம்/பாசுமதி சாதம் – ஒரு கப்
பச்சை மிளகாய் – 3
பெரிய வெங்காயம் – 2
கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – ஒரு டீஸ்பூன்
எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிதளவு
உப்பு – தேவையான அளவு
கொத்தமல்லித்தழை –
தேவையான அளவு
இறால் எக் ரைஸ்

செய்முறை:

* சுத்தம் செய்த இறாலை ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், சிறிது உப்பு சேர்த்து அரை மணி நேரம் பிசிறி வைக்கவும்.
* பிறகு, ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய், பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
* இத்துடன் இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பிசிறி வைத்த இறால் கலவையும் சேர்த்து வதக்கவும்.
* பிறகு கரம் மசாலாத்தூள், மீதமுள்ள மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கி, 10 நிமிடம் தீயைக் குறைத்து இறாலை வேக விடவும்.
* இறால் வெந்ததும் முட்டையை உடைத்து ஊற்றி, முட்டைக்குத் தேவையான உப்பு மட்டும் சேர்த்து முட்டையை இறாலுடன் சேர்த்து நன்கு கலக்கிவிட்டு வேகவிடவும்.
* பிறகு, இறக்கி வேகவைத்து ஆற வைத்த சாதத்துடன் கலந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
* தேவைப்பட்டால், மிளகுத்தூள் சேர்த்துக் கொள்ளலாம்.

குறிப்பு:
பாசுமதி அரிசியை உதிரியாக வடித்து, ஒரு டீஸ்பூன் நெய் விட்டு, ஆற வைத்திருந்து இறால் எக் ரைஸ் தயாரித்தால் சுவையாக இருக்கும்

Loading...
Rates : 0
VTST BN