இனிப்பான ஆப்பிள் பாயாசம்

Loading...

%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%86%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%af%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%af%8d
தேவையான பொருட்கள் :

ஆப்பிள் – 2
பால் – 4 கப்,
சர்க்கரை – ஒரு கப்,
கோவா – கால் கப் (உதிர்த்துக் கொள்ளவும்),
நெய் – 2 டேபிள்ஸ்பூன்,
மில்க்மெய்ட் – கால் கப்,
முந்திரி – தேவைக்கு
வெனிலா எசன்ஸ் – ஒரு துளி.


செய்முறை :

* ஆப்பிளை தோல் சீவி, விதை நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் சிறிது நெய் ஊற்றி முந்திரியை போட்டு வறுத்து ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
* வாணலியில் கொஞ்சம் நெய் விட்டு, பொடியாக நறுக்கிய ஆப்பிளை லேசாக வதக்கி வைக்கவும்.
* பாலை நன்கு காய்ச்சி அதனுடன் உதிர்த்த கோவா, மில்க்மெய்ட், சர்க்கரை சேர்த்துக் கொதிக்கவிடவும்.
* நன்கு கொதித்ததும் ஆப்பிள் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிட்டு… பொடித்த முந்திரி, வெனிலா எசன்ஸ் சேர்த்து இறக்கிப் பரிமாறவும்.
* இனிப்பான ஆப்பிள் பாயாசம் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply