இணைய வலையமைப்பின் ஊடாக தரவுகள் பரிமாற்றம் செய்யப்படும் வீடியோ

Loading...

இணைய வலையமைப்பின் ஊடாக தரவுகள் பரிமாற்றம் செய்யப்படும் வீடியோஇணையத்தளம் என்பது சம காலத்தில் அனைவரது வாழ்விலும் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
இந்த இணைய வலையமைப்பின் ஊடாக உலகளவில் நாள்தோறும் பாரிய அளவு தரவுகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன.
இந் நிலையில் அமெரிக்காவின் தொலைத்தொடர்பாடல் சேவையினை வழங்கும் முன்னணி நிறுவனமான AT&T உலகளவில் எவ்வாறு தரவுப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பான புகைப்படம் ஒன்றினையும், தரவுகளின் கொள்ளளவினையும் வெளியிட்டுள்ளது.
இதன்படி சராசரியாக நாள் ஒன்றிற்கு 49 பீட்டா பைட் (49 Petabytes அல்லது 49,000,000 Gigabytes) அளவிலான தரவுகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றது.
உலகிலேயே மிகவும் சிக்கல் தன்மை வாய்ந்த தொலைத் தொடர்பாடல் வலையமைப்பு சேவையினை வழங்கிவரும் AT&T நிறுவனம் மேற்கொண்ட பிரத்தியேக ஆய்வின் அடிப்படையிலேயே இத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்கண்ட தகவல்களை உள்ளடக்கிய வீடியோ ஒன்றினையும் அவர்கள் வெளியிட்டுள்ளனர்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply