இட்லிப் பொடி ரைஸ்

Loading...

இட்லிப் பொடி ரைஸ்
தேவையான பொருட்கள் :

உதிராக வடித்த சாதம் – 2 கப்,
இட்லி மிளகாய்ப் பொடி – ஒரு டேபிள்ஸ்பூன்,
எலுமிச்சம்பழச் சாறு – 3 ஸ்பூன்,
கடுகு – அரை ஸ்பூன்,
வேர்கடலை – சிறிதளவு
காய்ந்த மிளகாய் – 2
உளுத்தம்பருப்பு – ஒரு ஸ்பூன்,
பூண்டு – 4 பல்,
கறிவேப்பிலை – தேவையான அளவு,
எண்ணெய் – 2 ஸ்பூன்,
உப்பு – தேவையான அளவு.


செய்முறை :

* பூண்டை தோல் உரித்து பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை, உளுத்தம்பருப்பு, வேர்கடலை, காய்ந்த மிளகாய் நறுக்கிய பூண்டு சேர்த்து வதக்கிய பின் சாதத்தில் கொட்டிக் கிளறுங்கள்.
* அத்துடன் இட்லி மிளகாய்ப்பொடி, எலுமிச்சம்பழச் சாறு, சிறிது உப்பு சேர்த்துக் கலந்து பரிமாறுங்கள்.
* சுவையான இட்லிப்பொடி ரைஸ் ரெடி.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply