ஆனியன் பஃப்ஸ்

Loading...

%e0%ae%86%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%83%e0%ae%aa%e0%af%8d%e0%ae%b8%e0%af%8d
தேவையான பொருட்கள்

பஃப் பேஸ்ட்ரி ஷீட்-1 [நான் சதுர வடிவிலான சிறிய பேஸ்ட்ரி ஷீட்ஸ் உபயோகித்திருக்கிறேன். மேலே படத்திலுள்ள பெரிய பேஸ்ட்ரி ஷீட்என்றால் தேவைக்கேற்ப சிறிய துண்டுகளாக நறுக்கி உபயோகிக்கவும்]
உலர்ந்த மாவு-சிறிது
பால்-1டேபிள்ஸ்பூன்
வெங்காயம்-1
சோம்பு-1/2டீஸ்பூன்
கறிவேப்பில, கொத்துமல்லி இலை -சிறிது
கறிமசாலாதூள்-3/4டீஸ்பூன்
உப்பு
எண்ணெய்


செய்முறை

பேஸ்ட்ரி ஷீட்-ஐ ப்ரீஸரில் இருந்து வைத்து அறை வெப்பநிலைக்கு கொண்டுவரவும்.
வெங்காயத்தை கனமான நீளத்துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
கடாயில் எண்ணெய் காயவைத்து சோம்பு தாளித்து, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் வெங்காயத்துண்டுகளை சேர்த்து வதக்கவும்.
தேவையான உப்பு, கறிமசாலாதூள் சேர்த்து வெங்காயம் முக்கால் பாகம் வதங்கும் வரை வதக்கி கொத்துமல்லி இலை தூவி ஆறவைக்கவும்.
பேஸ்ட்ரி ஷீட்டை விருப்பமான வடிவில் நறுக்கி..
மாவு தூவிக்கொண்டு, சப்பாத்திக் கட்டையால் லேசாகத் தேய்த்து..
ஒவ்வொரு ஷீட்டிலும் வெங்காயக் கலவையை வைத்து, ஓரங்களை தண்ணீர் தடவி ஒட்டவும்.
சீல் செய்த பஃப்ஸ்கள் மீது பாலைத் தடவி, 400F ப்ரீஹீட் செய்த அவன் – ல் சுமார் 20 நிமிடங்கள் அல்லது பஃப்ஸ் பொன்னிறமாகும் வரை bake செய்து எடுக்கவும்.
சூடான சுவையான மொறு மொறு ஆனியன் பஃப்ஸ் ரெடி!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply