ஆண்களின் தாடியை வேகப்படுத்தும் சில வழிகள்

Loading...

ஆண்களின் தாடியை வேகப்படுத்தும் சில வழிகள்ஆண்களுக்கு தாடி தான் அவர்களின் வீரத்தையும், தைரியத்தையும் வெளிப்படுத்துகிறது. ஆனால் இத்தகைய தாடி சில ஆண்களுக்கு சரியாக வளர்வதில்லை. இதனால் அவர்கள் பல வழிகளை தேடி அலைகின்றனர்.
நீங்களும் அவர்களுள் ஒருவர் என்றால் இக்கட்டுரை உங்களுக்கு உபயோகமாக இருக்கும்.
ஏனெனில் இங்கு தாடி வளராமல் அவஸ்தைப்படும் ஆண்களுக்கு ஒருசில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அவற்றை தினமும் பின்பற்றினால், உங்களுக்கு விரைவில் தாடி வளரும்.
அதற்காக ஒரே நாளில் வளரும் என்றெல்லாம் நினைக்க வேண்டாம். எப்போதுமே ஒரு பிரச்சனைக்கு உடனடி தீர்வை விட, தாமதமாக தீர்வளிக்கும் வழிகள் தான் சிறந்த பலனைத் தரும்உணவுகள்

தாடி நன்கு வளர வேண்டுமானால், அதற்கு வளர்ச்சிக்குத் தேவையான சத்துக்கள் நிறைந்த வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாட உணவில் சேர்க்க வேண்டும். குறிப்பாக புரோட்டீன்கள், கொழுப்புக்கள் மற்றும் கார்போஹைட்ரேட்டுகளுடன், வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள் போன்றவை நிறைந்த உணவுகள் தாடியின் வளர்ச்சியை வேகப்படுத்தும்.
முக்கியமாக ஜிங்க், மக்னீசியம் மற்றும் வைட்டமின் டி போன்ற சத்துக்கள் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்கும். அதே சமயம் முட்டை, சால்மன், பசலைக்கீரை, ப்ராக்கோலி, பாதாம், முந்திரி, பால் பொருட்கள் போன்றவையும் தாடியின் வளர்ச்சியை அதிகரிக்கும்.மன அழுத்தத்தைக் குறைத்து தூக்கத்தை அதிகரிக்கவும்

ஒவ்வொருவருக்கும் குறைந்தது 6 மணிநேர தூக்கம் அவசியமானது. உடலும், முடியும் இந்நேரத்தில் தான் தன்னைத் தானே புதுப்பித்துக் கொள்கிறது. மேலும் ஒருவர் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் போது, அதனால் உடலும், மயிர் கால்களும் பாதிப்பிற்குள்ளாகும். ஆகவே மன அழுத்தத்தைக் குறைக்க தினமும் மனதை அமைதிப்படுத்தும் தியான பயிற்சியில் ஈடுபடுங்கள்.உடற்பயிற்சி

தினமும் உடற்பயிற்சி செய்வதன் மூலம், இதயத்துடிப்பு அதிகரித்து, அதனால் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரிக்கும். உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவு அதிகரித்தால், தாடியின் வளர்ச்சி தானாக அதிகரிக்கும்.பொறுமை அவசியம்

நீங்கள் முதல் முறையாக தாடியை வளர்க்கப் போகிறீர்கள் என்றால், முதலில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். அதில் முக்கியமாக முதல் முறையாக தாடி வைக்க நினைப்பவர்கள், 4-6 வாரத்திற்கு ஷேவ் செய்யக்கூடாது.புகைப்பிடிப்பதை நிறுத்தவும்

என்ன தான் டென்சனைக் குறைக்க புகைப்பிடிப்பதாக இருந்தாலும், சிகரெட்டில் உள்ள கேடு விளைவிக்கும் நச்சுப் பொருட்கள், உடல் ஆரோக்கியத்தைப் பாதிப்பதோடு, உங்கள் அழகையும் தான் பாதிக்கும். முக்கியமாக புகைப்பிடிப்பதால், விரைவில் சருமம் முதுமையடையும், முடி உதிர ஆரம்பிக்கும் மற்றும் முடியின் வளர்ச்சி தடுக்கப்படும்.சரும பராமரிப்பு அவசியம்

முக்கியமாக முகத்தை மிகவும் சூடான நீரினால் கழுவக்கூடாது. இதனால் சருமம் அதிக வறட்சிக்குள்ளாகும். மேலும் முகத்தை கழுவி உலர்த்திய பின், மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் சருமத்தில் வளரும் முடிக்கு தேவையான சத்துக்கள் கிடைத்து, தாடியின் வளர்ச்சி அதிகரிக்கும்.ஸ்கரப்

வாரத்திற்கு 1-2 முறையாவது ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் சருமத்தில் உள்ள அழுக்குகள், இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, தாடியின் வளர்ச்சி தூண்டப்படும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply