அமேஷான் DASH BUTTON பற்றி தெரியுமா | Tamil Serial Today Org

அமேஷான் DASH BUTTON பற்றி தெரியுமா

அமேஷான் DASH BUTTON பற்றி தெரியுமாஅனைத்து வகையான பொருட்களையும் ஒரே இடத்திலிருந்து ஒன்லைன் மூலம் கொள்வனவு செய்யக்கூடிய மிகப் பிரம்மாண்டமான சேவையை அமேஷான் நிறுவனம் வழங்கிவருகின்றது.
இந் நிறுவனம் Dash Button எனும் சேவையினை சில காலங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் அறிமுகம் செய்திருந்தது.
Dash Button என்பது வீட்டில் இருந்து பொருட்களை கொள்வனவு செய்ய பயன்படுத்தக்கூடிய பொத்தான் ஒன்றினைக் கொண்ட சிறிய சாதனம் ஆகும்.
இச்சாதனமானது வீட்டில் காணப்படும் இணைய இணைப்பின் ஊடாக அமேஷான் தளத்துடன் இணைக்கப்பட்டிருக்கும்.
குறித்த சாதனத்தின் பொத்தானை அழுத்துவதன் மூலம் ஒரு குறித்த பொருளை ஒன்லைனில் கொள்வனவு செய்ய முடியும்.

ஒரு பொத்தான் மூலம் ஒரு பொருளையே ஆர்டர் செய்ய முடிவதுடன், வெவ்வேறு பொருட்களை கொள்வனவு செய்ய தனித்தனியான பொத்தான்களை பயன்படுத்த வேண்டும்.
இச் சேவை தற்போது ஐக்கிய இராச்சியத்திலும் அமேஷன் நிறுவனத்தினால் அறிமுகம் செய்யப்படுகின்றது.
இதற்காக பயன்படுத்தப்படும் Dash Button ஒன்றின் விலையானது 4.99 பவுண்ட்ஸ்களாகும்.

Loading...
Rates : 0
VTST BN