அப்பிள் நிறுவனம் வடிவமைத்து வரும் வீடியோ சோஷியல் அப்பிளிக்கேஷன்

Loading...

அப்பிள் நிறுவனம் வடிவமைத்து வரும் வீடியோ சோஷியல் அப்பிளிக்கேஷன்இலகுவான முறையில் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கதைத்து மகிழுதல் உட்பட உலகளாவிய பல செய்திகளை உடனுக்கு உடன் தரும் பிரபல அப்பிளிக்கேஷனான Snapchat பற்றி அனைவரும் அறிந்திருப்பீர்கள்.
தற்போது இந்த அப்பிளிக்கேஷனைப் போன்றது வீடியோ சோஷியல் அப்பிளிக்கேஷன் ஒன்றினை அப்பிள் நிறுவனம் வடிவமைத்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன் மூலம் வீடியோக்களை பகிர்ந்து கொள்ளும் வசதியும் கிடைக்கப்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் முற்றிலும் இலவச அப்பிளிக்கேஷனாக வெளிவரவுள்ள இந்த இதனை iOS 10 மற்றும் அதற்கு பின்னர் அறிமுகமாகும் அப்பிளின் இயங்குதளங்களில் பயன்படுத்த முடியும்.
தவிர இதில் ஒரு நிமிடங்களுக்கும் குறைவான வீடியோக்களை எடிட் செய்யும் வசதி, வீடியோக்களை பில்டர் செய்யும் வசதி என்பனவும் உள்ளடக்கப்பட்டிருக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அடுத்த வருடம் அறிமுகம் செய்யப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply