அப்பிள் நிறுவனத்தின் ஐரோப்பிய கண்டன முதலீட்டால் தொழில்வாய்ப்புக்கள் பாதிப்பு

Loading...

அப்பிள் நிறுவனத்தின் ஐரோப்பிய கண்டன முதலீட்டால் தொழில்வாய்ப்புக்கள் பாதிப்புவரி விவகாரமொன்று தொடர்பில் அப்பிள் நிறுவனத்திடம் 14.5 பில்லியன் அமெரிக்க டொலரை அறவிடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியம் தீர்மானித்துள்ளது.
அப்பிள் நிறுவனம், அயர்லாந்து அரசுடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம், ஐரோப்பிய விற்பனையில் 1 வீதத்தத்திற்கும் குறைவாகவே வரி செலுத்துகின்றது.
எனினும் மற்றைய நிறுவனங்கள் 12.5 வீதத்தை செலுத்துவது வழமையாக உள்ளது. இந்நிலையானது மற்றைய நிறுவனங்களை விட அப்பிளுக்கு அசாதாரண மேலதிக நன்மையை வழங்குவதாகவும், இது பெரும் சட்டமீறல் எனவும் ஐரோப்பிய ஒன்றியம் தெரிவிக்கின்றது.
இது தொடர்பில் அப்பிள் மற்றும் அயர்லாந்தை ஐரோப்பிய ஒன்றியம் கடுமையாக சாடியுள்ளதுடன், 14.5 பில்லியன் அமெரிக்க டொலரை தண்டப்பணமாக அறவிடுவதற்கும் தீர்மானித்துள்ளது.
இதற்கெதிராக அப்பிள் மேன்முறையீடு செய்யுமென எதிர்ப்பார்க்கப்படுகின்றது. இவ்விவகாரமானது அப்பிளின் பங்குச்சந்தை நடவடிக்கைகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெரும் தொகை என்பதால் மேலும் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்தக்கூடுமென தெரிவிக்கப்படுகின்றது.
அப்பிள் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி, டிம் குக் பெரும் அதிருப்தியை வெளியிட்டுள்ளார். இம்முடிவானது அப்பிள் நிறுவனத்தினை பெரிதும் பாதிக்குமென தெரிவித்துள்ளார் குக்.
மேலும் அப்பிள் நிறுவனத்தின் ஐரோப்பிய கண்டம் மீதான முதலீடு, தொழில்வாய்ப்புக்கள் பாதிக்கப்படுமென கவலை வெளியிட்டுள்ளார்.
அயர்லாந்து பல வருடங்களாக முதலீட்டாளர்களைக் கவரும் முகமாக குறைந்த வரி வீதத்தை பேணி வருகின்றது.
இதனை பல அமெரிக்க நிறுவனங்கள் வரி ஏய்ப்புக்காக பயன்படுத்துக்கொள்கின்றமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply