அன்றாட வாழ்க்கையில் தவிர்க்க வேண்டிய உணவுகள்

Loading...

%e0%ae%85%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1%e0%ae%be%e0%ae%9f-%e0%ae%b5%e0%ae%be%e0%ae%b4%e0%af%8d%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%88%e0%ae%af%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0நம் அன்றாட வாழ்க்கையில் சாப்பிடும் சத்துள்ள உணவுப் பொருட்களை அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், பலவகையான தீங்கை விளைவிக்கும் இதை தான் ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்று கூறியுள்ளார்கள்.
உடல் ஆரோக்கியத்திற்கு தேவைப்படும் சத்துகள் நாம் சாப்பிடும் உணவுகளில் அளவுக்கு அதிகமாக இருந்தால், அது நம் உடம்பிற்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும்.

ஹாட் டோக் (Hot dog)

பல வகையான சுவைகளில் இறைச்சியைப் பதப்படுத்த பயன்படுத்தப்படும் ஹாட்டோக் என்னும் துரித உணவில் Sodium erythorbate மற்றும் sodium nitrate போன்றவை உள்ளது. இவைகள் நம் உடலுக்கு ஆரோக்கியத்திற்கு பெரும் ஆபத்தை உண்டாக்குகிறது.
எனவே இந்த உணவை நாம் தினமும் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


சோடா

கடுமையான வெயிலுக்கு இதமாக இருக்கும் சோடா சம்பந்தப்பட பானத்தை நாம் தினமும் அருந்துவதால், உங்களின் உடல் பருமனை அதிகரிக்க செய்து, உடல் எடை சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எனவே அதிகமாக குளிர்பானங்கள் குடிப்பது நம் உடலுக்கு கடுமையான தீங்கை விளைவிக்கும்.


‘cereals’ காலை உணவு

சிறுவர்கள் விரும்பும் Cereals உணவில் விட்டமின் A, நியாசின், மற்றும் துத்தநாகம் போன்ற சத்துகள் அளவுக்கு அதிகமாக நிறைந்துள்ளது.
எனவே இந்த உணவை நாம் அதிகமாக சாப்பிடும் போது, அதிலுள்ள விட்டமின்கள் அதிகமாக நம் உடலில் சேர்வதால், ஈரல் பாதிப்பு, முடி உதிர்தல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.


தயிர்

வீட்டில் தயாரிக்கும் தயிர்களில் கால்சியும் சத்து அதிகமாக நிறைந்திருப்பதால் எலும்புகளை வலுப்படுத்தி, ஜீரணத்திற்கு மிகவும் உதவியாக உள்ளது.
ஆனால் கடைகளில் புட்டிகளில் அடைக்கப்பட்டு விற்கப்படும் தயிர்களில் அளவுக்கு அதிகமான சீனி சேர்க்கப்படுகிறது.
இதனால் சிறுநீரக கோளாறுகள் மற்றும் , ரத்த ஓட்ட பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது.
எனவே கடைகளில் விற்கும் தயிர்கள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.


காபி

காபியில் மன அழுத்தத்தை அதிகரிக்கும் கெஃபேன் இருப்பதால், அளவுக்கு அதிகமாக நாம் தினமும் காபி குடிப்பதால், இருத நோய் மற்றும் ஆஸ்துமா போன்ற நோய்களின் தாக்கம் அதிகமாக ஏற்பட வாய்ப்புள்ளது.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply