Samsung Galaxy Note 7 ஸ்மார்ட்போனில் அசத்தலான பாதுகாப்பு அம்சம் புகைப்படம் கசிந்தது

Loading...

Samsung Galaxy Note 7 ஸ்மார்ட்போனில் அசத்தலான பாதுகாப்பு அம்சம் புகைப்படம் கசிந்ததுSamsung Galaxy Note 7 ஸ்மார்ட்போனில் iris scanner என்ற பாதுகாப்பு அம்சம் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான புகைப்படங்களும் தற்போது வெளியாகி எதிர்பார்ப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளன.

அடுத்த மாதம் வெளியாகவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் தொடர்பாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன.

இந்த நிலையில் iris scanner என்ற கருவிழி கொண்டு ஸ்மாட்போனை பாதுகாக்கும் பாதுகாப்பு அம்சமும் இதில் வழங்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.

போனை பயன்படுத்தும் நபர் முகத்தில் இருந்து 25 முதல் 35 செ.மீ தூரத்தில் போனை வைத்து இந்த iris scanner பாதுகாப்பு அம்சங்களை பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதில் கருவிழியை ஸ்கேன் செய்ய இரண்டு வட்ட வடிவிலான சென்சாரும், போனை திறக்க பேட்டனும் கொடுக்கப்பட்டுள்ளது.

Samsung நிறுவனம் முன்னதாக iris scanner கொண்ட Galaxy Tab சாதனத்தை அறிமுகப்படுத்தியது. ஆனால் ris scanner அம்சங்களுடன் அந்த நிறுவனம் அறிமுகப்படுத்தும் முதல் ஸ்மார்ட் போன் இது தான்.

மேலும், இந்த ஸ்மார்ட்போன் 6GB RAM, 12MP பின் பக்க கமெரா, 5MP முன்பக்க கமெரா, 3600mAh பேட்டரி கொண்டுள்ளது.

பல்வேறு சிறப்பசம்ங்களுடன் வெளிவரவிருக்கும் இந்த ஸ்மார்ட்போன் பயனர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை கொடுக்கவுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply