HUAWEI HONOR 5X விற்பனையில் சாதனை

Loading...

HUAWEI HONOR 5X விற்பனையில் சாதனைசீனாவில் நடந்த செய்தியாளர் நிகழ்வின் போது Huawei நிறுவனம் தனது the Honor 5A என்னும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது.

குறித்த நிகழ்வின் போது Huawei நிறுவனத்தின் Honor பிராண்ட் தலைவர் ஜாவோ மிங் பேசுகையில், அந்நிறுவனத்தின் Honor 5X ஸ்மார்ட்போன் 8 மில்லியன் விற்பனையாகி மைல்கல்லை எட்டியுள்ளதை தெரியப்படுத்தினார்.

Huawei Honor 5X ஸ்மார்ட்போன் கடந்த ஆண்டு சீனாவில் வெளியிடப்பட்டது, இந்த ஆண்டு தொடக்கத்தில் ஐரோப்பா, அமெரிக்கா மற்றும் ஆசியாவில் உள்ள முக்கிய சந்தைகளில் முதல்முறையாக விற்பனைக்கு வந்தது.

முன்னதாக, 10 மில்லியன் Huawei Honor 5X ஸ்மார்ட்போன்கள் விற்பனையாகும் என போன் வெளியிட்டின் போது அந்நிறுவனம் தெரிவித்திருந்தது நினைவுக்கூரத்தக்கது.

Huawei Honor 5X ஸ்மார்ட்போன் 5.5 இன்ச் HD திரை மற்றும் Qualcomm Snapdragon 616 processor கொண்டுள்ளது, இதோடு 2GB அல்லது 3GB RAM வழங்கப்பட்டுள்ளது.

மேலும், 16 GB இன்டர்னல் மெமரியுடன், Android 5.1.1 Lollipop இயங்குதளம் வழங்கப்பட்டுள்ளது. 13MP பின்பக்க கமெரா, 5 MP முன்பக்க கமெரா, 3000 mAh பேட்டரி கொண்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply