Dropbox Paper அப்பிளிக்கேஷன் பற்றி தெரியுமா

Loading...

Dropbox Paper அப்பிளிக்கேஷன் பற்றி தெரியுமாகிளவுட் ஸ்டோரேஜ் எனப்படும் ஒன்லைனில் கோப்புக்களை சேமித்து வைக்கப் பயன்படும் வசதி சம காலத்தில் பிரபல்யம் பெற்று விளங்குகின்றது.

இச் சேவையினை வழங்கிவரும் இணையத்தளங்களுள் பிரபல்யமானதாக Dropbox விளங்குகின்றது.

தற்போது இத் தளத்தின் ஊடாக மற்றுமொரு புதிய வசதியை பயனர்கள் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Dropbox Paper எனும் இந்த அப்பிளிக்கேஷன் ஊடாக மைக்ரோசொப்ட் வேர்ட்டினைப் பயன்படுத்தி மேற்கொள்ளக்கூடிய செயற்பாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இதற்கு மேலாக ஒன்லைனில் வைத்தே எடிட் செய்ய முடிவதுடன் முக்கியமான தரவுகளை Dropbox சேவை ஊடாக பகிர்ந்துகொள்ளக்கூடியதாகவும் இருக்கின்றது.

தற்போது இந்த அப்பிளிக்கேஷன் ஆனது அப்பிளின் iOS மற்றும் கூகுளின் Android சாதனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ் வசதியினை உலகெங்கிலும் உள்ள Dropbox பயனர்கள் தற்போது பயன்படுத்தி மகிழ முடியும்.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply