4ஜி சேவையை இலவசமாக அளிக்கவுள்ள ரிலையன்ஸ் ஜியோ

Loading...

4ஜி சேவையை இலவசமாக அளிக்கவுள்ள ரிலையன்ஸ் ஜியோரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவை அறிமுகப்படுத்தியதை அடுத்து 4ஜி வசதியுள்ள கைப்பேசிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு அனைத்து வகை சேவைகளும் இலவசமாக வழங்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
தொலை தொடர்பு துறையில் புரட்சியை ஏற்படுத்தப்போவதாக முன்னறிவிப்போடு வெளியாகிறது ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஜியோ 4ஜி சேவை.
இந்த சிம்மை வாங்குவோருக்கு, முதல் மூன்று மாதம், வாய்ஸ் அழைப்புகள், எஸ்எம்எஸ்கள், கட்டுப்பாடற்ற டேட்டா சேவைகள் என அனைத்துமே இலவசம் என்ற அறிவிப்பு தற்போது இளைஞர்களுக்கு ஆர்வத்தை தூண்டியுள்ளது.
4ஜி வசதியுள்ள சாம்சங் மற்றும் எல்ஜி ஸ்மார்ட் போன்களைப் பயன்படுத்தும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் ரிலையன்ஸ் ஜியோ 4ஜி சேவையை இலவசமாக அளிக்க இருப்பதாக அந்த நிறுவனம் அறிவித்திருந்தது.
இதற்கு முன்னோட்ட சலுகை (Preview) என பெயரிடப்பட்டது. இந்த சலுகையை அனைத்து ரிலையன்ஸ் டிஜிட்டல் கடைகளுக்கு சென்று பயன்படுத்திக் கொள்ள முடியும்.
வாடிக்கையாளர்கள் தங்களது விவரங்களை அளித்துவிட்டு ஜியோ சிம் கார்டை இந்த கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என்று ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆனால், சாம்சங் மற்றும் எல்ஜி மட்டுமல்ல, ஜியோமி, லெனோவா உள்ளிட்ட 4ஜி வசதி கொண்ட அனைத்து வகை ஸ்மார்ட் போன்களுக்கும் சிம் தரப்பட உள்ளதாக ரிலையன்ஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சலுகையின் மூலம் வாடிக்கையாளர்கள், ஆடியோ மற்றும் ஹெச்டி வீடியோ கால், எஸ்எம்எஸ் வசதி, அளவில்லாத இண்டர்நெட் வசதி ஆகியவற்றை இலவசமாக 90 நாட்களுக்கு பயன்படுத்திக் கொள்ள முடியும்.
ரிலையன்ஸ் டிஜிட்டல், டிஜிட்டல் எக்ஸ்பிரஸ் மினி ஸ்டோர்களில் சிம்கார்டுகள் கிடைக்கின்றனவாம்.
இதனிடையே, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் விதிமுறைகளை புறக்கணித்து முழுமையான சேவை அளிக்க உள்ளதாக தொலைத் தொடர்பு நிறுவனங்களின் கூட்டமைப்பு (COAI) தொலைத் தொடர்பு துறைக்கு புகார் அளித்தது.
இதற்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் தங்களது திட்டங்களை முடக்குவதற்காக இந்த குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளதாக பதிலளித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply