3.6 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ள டுவிட்டர்

Loading...

3.6 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ள டுவிட்டர்சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு ஆதரவு திரட்டும் வகையில் செயல்பட்டு வந்த 3.6 லட்சம் கணக்குகளை முடக்கியுள்ளதாக டுவிட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது.
கடந்த ஆண்டு முதல் 3.60 லட்சம் டுவிட்டர் கணக்குகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்ததாகவும், இதனடிப்படையிலே அவை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரியில் மட்டும் 1.25 லட்சம் கணக்குகள் முடக்கப்பட்டது. தற்போது மேலும், 2.35 லட்சம் டுவிட்டர் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.
பயங்கரவாத அமைப்புகள் தொடர்புடைய கணக்குகளை தினந்தோறும் நீக்கும் நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருவதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், நீக்கப்பட்ட கணக்குகள் புதிய பெயர்களில் மீண்டும் தொடங்குகிறார்களா என்று கண்காணிக்கவும் கூடுதல் ஊழியர்களை நியமித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply