குருதியமுக்கத்தை கட்டுப்படுத்தும் ஓமோன் தொகுதி

Loading...

குருதியமுக்கத்தை கட்டுப்படுத்தும் ஓமோன் தொகுதிபுதிய ஆய்வு ஒன்றின் மூலம், குருதியமுக்கத்தை கட்டுப்படுத்தும் ஓமோன் தொகுதியானது (RAS), வளர்சிதை மாற்ற செயற்பாட்டைக் குறைத்து, உடல் பருமன் அதிகரிக்க காரணமாகிறது என தெரியவருகிறது.
மேற்பபடி ஓமோன் தொகுதியே உடலின் சக்தி சமநிலையை கட்டுப்படுத்துவதுடன், வளர்சிதை மாற்ற வீதத்தையும் கட்டுப்படுத்துகிறது.
இதனால் இதன் பங்கு உடல் உடை அதிகரிப்பில் மிக முக்கியமானது.
ஆனாலும் இது உடலில் தொழிற்படும் இடத்தை அடிப்படையாகக் கொண்டே, அதன் தாக்கம் இருக்கும் என ஆய்வாளர்கள் சொல்கின்றார்கள்.
சில இடங்களில் இது உடல் எடை அதிகரிப்பிற்கு எதிரான தாக்கத்தையும் கொண்டிருக்கலாம் என சொல்லப்படுகிறது.
உதாரணத்திற்கு மூளைப் பகுதியில் RAS இன் அளவு அதிகரிப்பின், அது ஓய்விலுள்ள வளர்சிதை மாற்ற செயற்பாட்டை அதிகரித்து சக்தி செலவாவதை அதிகரிக்கின்றது. இதனால் எடை வீழ்ச்சிக்கு காரணமாகின்றது.
ஆனால் ஏனைய இடங்களில் இது அநுசேபத்தை குறைத்து, உடல் எடையை அதிகரிப்பது ஆய்வுகள் மூலம் தெரிய வந்திருக்கிறது.
இந்த ஆய்வுகள் எலிகள் மூலம் மேற்கொள்ளப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Loading...
Rates : 0
VTST BN