ஒட்டகங்களில் இருந்து உருவாகும் HCOV-229E வைரஸ்

Loading...

ஒட்டகங்களில் இருந்து உருவாகும் HCOV-229E வைரஸ்மனிதர்களில் உண்டாகும் சளி நோய்க்கு பிரதான காரணமாக வைரசுக்கள் காணப்படுகின்றன.
அதிலும் உலகில் காணப்படும் நான்கில் ஒரு பங்கு வைரசுக்கள் சளி நோயை ஏற்படுத்தக்கூடியன என கண்டறியப்பட்டுள்ளது.
அவ்வாறு சளி நோயை ஏற்படுத்தக்கூடிய வைரசுக்களில் HCoV-229E எனும் வைரஸ் ஒட்டகங்களில் இருந்து தொற்றுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த வைரஸ் ஆனது ஒட்டகங்களில் இருந்து உருவானதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனை சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஒன்று கண்டறிந்துள்ளது.
எனினும் இந்த ஆய்வு முடிவானது உலக விஞ்ஞானிகளிடத்தில் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
காரணம் வைரசுக்கள் இரு வேறுபட்ட இனங்களுக்கு இடையில் நோய்களைப் பரப்புவது இல்லை என்ற எடுகோளே 2012ம் ஆண்டு வரையில் காணப்பட்டது.
ஆனால் முதன் முறையாக ஒட்டகங்களில் காணப்படும் வைரசுக்களால் மனிதர்களுக்கு சளி தொற்று எற்படுவதாக கண்டறியப்பட்டமை ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆய்விற்காக சுமார் 1,000 ஒட்டகங்கள் பயன்படுத்தப்பட்டிருந்ததாக Christian Drosten எனும் ஆய்வாளர் தெரிவித்துள்ளார்.

Loading...
Rates : 0
VTST BN