உடல் நலத்தில் செரிமானத்தின் பங்கு

Loading...

உடல் நலத்தில் செரிமானத்தின் பங்குஉடல் நலத்தில் செரிமானம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. செரிமானத்தில் பாதிப்பு ஏற்பட்டால் தொடர்ந்து பல வியாதிகள் ஏற்பட வாய்ப்புகள் இருக்கிறது. வயிற்று வலியில் இருந்து தொடங்கி அடுத்து அடுத்து பல வியாதிகளாக பெருகிவிடும். இதனால் தான் பல வியாதிகளுக்கு வயிற்றில் ஏற்படும் கோளாறுகளையே மருத்துவர்கள் குறிப்பிடுகின்றனர்.

நல்ல ஆரோக்கியமான வாழ்விற்காக ஆய்வுகளின் முடிவுகள் கூறுவது கூட சீரான உணவு பழக்கத்தையும், உடற்பயிற்சியையும் தான். வாருங்கள் இப்போது செரிமானத்திறனை மேலோட்டமாக நாமே தெரிந்துக்கொள்வது எப்படி என்று பார்ப்போம்….

* சாப்பிட்ட உணவு ஜீரணமாக 3 முதல் 4 மணி நேரம் எடுத்துக்கொண்டால் உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்று அர்த்தம். சாதாரணமாக 4.30 மணி நேரம் அல்லது 5 மணி நேர இடைவேளைக்கு பிறகு மீண்டும் பசிக்கத் தொடங்கினால் உடல் நல்ல நிலையில் இருக்கிறது என்பதை அறிந்துக் கொள்ளலாம். பரோட்டா போன்ற சில கடின உணவுகள் ஜீரணமாக காலதாமதம் ஆகலாம்.

* 16 முதல் 20 வயதுக்கு உட்பட்டவர்கள் உயரம் குறைவாக இருந்தால் நல்ல உடற்பயிற்சியின் மூலம் குறிப்பாக நீச்சல் பயிற்சி, அதிக அளவு தண்ணீர் குடிப்பதன் மூலம் வேகமான வளர்ச்சியைப் பெறலாம். மேலும், சத்தான உணவுகளையும் உட்கொள்ள வேண்டும்.

* உடல் எடையில் குறை இருந்தால் சத்துள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். எடை அதிகமாக இருந்தால் அதற்கான பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கொழுப்பின் அளவையும் சீரான உடற்பயிற்சியின் மூலம் கட்டுக்குள் வைத்திருக்க முடியும்.

* டீ, காபி மற்றும் குளிர்பானங்கள் அருந்துவது, நொறுக்குத் தீனிகளை அடிக்கடி உண்பது போன்றவை செரிமானத் திறனில் மாற்றங்களை ஏற்படுத்தும். எனவே, செரிமானத் திறன் ஒழுங்காக இருக்க வேண்டும் என்றால் சீரான உணவுப் பழக்கத்தையே கடைபிடிக்க வேண்டும்.

* எனவே, சீரான உணவுப் பழக்கத்தையும், தேகப் பயிற்சியையும் மேற்கொண்டால் வாழ்வை வளமாக்கிக் கொள்ள முடியும் என்பதை எப்போதும் நினைவில் கொள்ளவேண்டும்.

Loading...
Rates : 0
VTST BN