ஹொட் பட்டர் கட்டுல் பிஷ்

Loading...

ஹொட் பட்டர் கட்டுல் பிஷ்


தேவையான பொருட்கள்

கட்டுல் பிஷ் – 500g
சிவப்பு குடமிளகாய் -25g
பச்சை குடமிளகாய் -25g
பூண்டு -50g
செத்தல் மிளகாய் -6 துண்டு
மிளகாய் பேஸ்ட் -2 மேசைக்கரண்டி
மிளகு
உப்பு
சீனி – 2 தேக்கரண்டி
அஜினமொட்டோ – 1/2 தேக்கரண்டி
வெள்ளை முட்டை – 1 அல்லது 1/2
சோள மா – 50g
பட்டர் – 75g
எலுமிச்சை – 1 அல்லது 2
சோயா சோஸ் – 2 மேசைக்கரண்டி
ஸ்ப்ரிங் வெங்காயம்

செய்முறை

சிறு சிறு கட்டியாக வெட்டிய கட்டுல் பிஷ் , மிளகு , உப்பு , 1 அல்லது 2 எலுமிச்சை சேர்த்து கலக்கி 15 நிமிடம் அல்லது 30 நிமிடம் பிரிஜ் இல் வைக்கவும் .
பின் சோள மா மற்றும் வெள்ளை முட்டை மட்டும் பயன்படுத்தி பட்டர் ஐ சேர்த்து கலக்கி merinate செய்த கட்டுல் பிஷ் ஐ பட்டரில் டிப் செய்து பொன் நிறம் ஆகும் வரை பொரிக்கவும் . (cripsy ஆகும் வரை பொரிக்கவும் )
ஒரு பான் இல் பட்டர் ஐ கொதிக்க வைத்து அதில் பூண்டு பேஸ்ட் , மிளகாய் பேஸ்ட் , கறிமிளகாய் , சிறு துண்டாக வெட்டப்பட்ட செத்தல் மிளகாய் , சோயா சோஸ் , உப்பு , மிளகு , சீனி , அஜினமொட்டோ , பொரித்த கட்டுல் பிஷ் , சிறு துண்டாக வெட்டிய ஸ்ப்ரிங் வெங்காயம் இவற்றை இட்டு நன்கு கலக்கி சுடச்சுட பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply