ஹாட் சீஸ் பன்

Loading...

ஹாட் சீஸ் பன்

தேவையானவை:

பன் – 4.
சீஸ் துருவல் – அரை கப்,
வேகவைத்து மசித்த பச்சைப் பட்டாணி – கால் கப்,
கேரட் துருவல் – 2 டேபிள்ஸ்பூன்,
பச்சை மிளகாய் – ஒன்று (மிகவும் பொடியாக நறுக்கவும்),
வெண்ணெய்,
உப்பு – தேவையான அளவு.

செய்முறை

* மசித்த பச்சைப் பட்டாணி, கேரட் துருவல், சீஸ் துருவல், நறுக்கிய பச்சை மிளகாய், உப்பு ஆகியவற்றை ஒன்றாக சேர்க்கவும்.
* பன்னின் மேல் பகுதியை மெதுவாக வெட்டி எடுத்து விட்டு, கீழ்ப்பகுதியின் நடுவில் உள்ள பாகத்தை கத்தியால் கீறியெடுத்து குழி செய்து அதனுள் சீஸ் கலவையை ஸ்டஃப் செய்து மேல் பக்க பன்னால் மூடவும் இதேபோல் எல்லா பன்னிலும் செய்யவும்.
* தவாவை காயவிட்டு வெண்ணெய் தடவி அதன் மேல் பன்னை வைத்து சுற்றிலும் சிறிது வெண்ணெய் சேர்த்து லேசாக பொன்னிறமானதும் மறுபுறம் திருப்பிப் போட்டு சூடானதும் எடுத்துப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply