ஸ்மார்ட்போன் பயன்படுத்திறீங்களா அப்போ இது உங்களுக்கு தெரியுமா

Loading...

ஸ்மார்ட்போன் பயன்படுத்திறீங்களா அப்போ இது உங்களுக்கு தெரியுமாஸ்மார்ட்போன் வைத்திருக்கும் ஒருவர் அனைத்து விதத்திலும் ஒரு நாளைக்கு சராசரியாக 2,617 முறை ஸ்மார்ட் போனை பயன்படுத்துவது ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது.

ஆண்ட்ராய்டு போன் பயன்படுத்தும் 94 நபர்களை ஒரு குழுவாக பிரித்து கிட்டதட்ட 1 லட்சத்திற்கும் அதிகமானோரிடம் 5 நாட்கள் நடத்திய ஆய்வு ஒன்றில் இது கண்டறியப்பட்டுள்ளது.

இதன்படி சாதாரணமாக போன் பயன்படுத்தும் ஒரு நபர் அனைத்து விதத்திலும் ஒருநாளைக்கு சராசரியாக 2,617 முறை பயன்படுத்துவதாகவும், அதே சமயம் அதிகமாக போன் பயன்படுத்தும் நபர் 5,427 முறை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சாதாரண நபர் ஒருநாளில் போனின் தொடுதிரையை 2.42 மணி நேரமும், அதிகமாக போன் படுத்தும் நபர் 3.75 மணி நேரமும் பயன்படுத்துகின்றனர்.

அதிகமாக போன் பயன்படுத்தும் நபர் ஒரு வருடத்தில் ஒரு மில்லியனுக்கும் அதிகமாக போனை பயன்படுத்துவதாக கூறப்பட்டுள்ளது.

தவிர, காலை 7 மணிக்கு போனை தொடும் நபர் இரவு உணவு சாப்பிடும் வரை போனை பயன்படுத்துகிறார் என்றும், இவர் காலை 5 மணிக்குள் ஒரு முறையாவது தனது போனை சோதனையிடுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this:

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply