வெள்ளையாக ஆசைப்படுகிறீர்களா இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்க

Loading...

வெள்ளையாக ஆசைப்படுகிறீர்களா இந்த ஃபேஸ் பேக்குகளை ட்ரை பண்ணி பாருங்கஒவ்வொருவருக்கும் வெள்ளையான சருமம் வேண்டும் என்ற ஆசை இருக்கும். இதற்காக கடைகளில் விற்கப்படும் க்ரீம்கள் பலவற்றை வாங்கி சருமத்தில் தடவி வருவோம். ஆனால் அப்படி க்ரீம்களை தடவுவதால், சருமம் தற்காலிகமாகத் தான் வெள்ளையாக காட்சியளிக்குமே தவிர, முகத்தை கழுவினால் பழைய படி மாறிவிடுவோம்.

எனவே க்ரீம்களின் உதவியை நாடி, சருமத்தின் நிறத்தை அதிகரிக்காமல், இயற்கை வழிகளின் உதவியை நாடினால் நிச்சயம் நல்ல பொலிவான மற்றும் வெள்ளையான சருமத்தைப் பெறலாம். அதற்கு சமையலறைக்கு சென்றாலே போதும். ஏனெனில் அங்குள்ள பொருட்களைக் கொண்டே சருமத்தின் நிறத்தை வெள்ளையாக மாற்றலாம்.

இப்போது சருமத்தின் நிறத்தை அதிகரிக்கும் ஃபேஸ் பேக்குகள் என்னவென்று பார்ப்போம்.ரோஸ்வாட்டர் ஃபேஸ் பேக்

ரோஸ் வாட்டர் அனைத்து வகையான சருமத்திற்கும் ஏற்ற ஒரு அழகு பராமரிப்பு பொருள். அதற்கு கடலை மாவு, தயிர் மற்றும் ரோஸ் வாட்டரை ஒன்றாக கலந்து, முகத்தில் தடவி நன்கு உலர வைத்து கழுவ வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பதை காணலாம்.ஆரஞ்சு பழத் தோல் மற்றும் தயிர்

ஆரஞ்சு பழத்தின் தோலை வெயிலில் நன்கு காய வைத்து, பொடி செய்து, அத்துடன் தயிர் சேர்த்து வாரம் 3 முறை ஃபேஸ் பேக் போட்டு வந்தால், பொலிவான சருமத்தைப் பெறலாம்.எலுமிச்சை சாறு, பால் மற்றும் தேன்

நல்ல வெள்ளையான சருமத்தைப் பெற, பால், தேன் மற்றும் எலுமிச்சை சாற்றினை ஒன்றாக கலந்து, சருமத்தில் தடவி உலர வைத்து, குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சருமத்தின் நிறத்தில் நல்ல மாற்றத்தைக் காணலாம்.தக்காளி

தினமும் வெளியே சுற்றிவிட்டு வீட்டிற்கு வந்ததும், தக்காளியைக் கொண்டு சருமத்தை மசாஜ் செய்து, சிறிது நேரம் ஊற வைத்து, பின் கழுவ வேண்டும். இதன் மூலம் நல்ல பலனைப் பெறலாம்.சந்தன ஃபேஸ் பேக்

சந்தன பொடியுடன், கடலை மாவு மற்றும் காய்ச்சாத பால் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து, ஈரமான முகத்தில் தடவி நன்கு உலர வைத்து, பின் குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும். இந்த ஃபேஸ் பேக்கை வாரம் 3 முறை போட்டு வந்தால், சருமத்தின் நிறம் அதிகரிப்பது உறுதி.பப்பாளி ஃபேஸ் பேக்

பளிச் சருமத்தைப் பெற பப்பாளியை மசித்து, முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். இந்த செயலை தினமும் செய்து வந்தால், சருமத்தில் உள்ள அழுக்குகள் அனைத்தும் நீங்கி, முகம் பொலிவோடு இருக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply