வெள்ளி விழா காணும் WWW

Loading...

வெள்ளி விழா காணும் WWWபிரம்மாண்டமான இந்த உலகத்தினை ஒரு கிராமம் போல் சுருக்கி வைத்திருப்பதில் இணையத்தள வலையமைப்பானது முதன்மை பெறுகின்றது.
இன்று இணையத்தளத்தினை பாவனை செய்யாதவர்கள் இல்லை என்று சொல்லும் அளவிற்கும் ஒவ்வொருவரினது வாழ்விலும் அத்தியாவசியமானதாகவும் மாறிவருகின்றது.
இப்படியான இணையத்தள உருவாக்கத்திற்கு WWW (World Wide Web) எனப்படும் உலகளாவிய வலையமைப்பு எனும் பதம் முக்கிய இடத்தை பெறுகின்றது.
இப் பதம் கண்டுபிடிக்கப்பட்டு தற்போது 25 வருடங்கள் ஆகி விட்டன என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?
ஆம் WWW எனும பதமானது 1989ம் ஆண்டு கணனி விஞ்ஞானியான Tim Berners-Lee என்பவரால் உருவாக்கப்பட்டது.
இதன் பின்னரே HTML, HTTP மற்றும் URL தொழில்நுட்பங்கள் உருவாக்கப்பட்டுள்ளது.
அதே போன்று பொதுமக்களுக்கான முதலாவது இணையத்தளமும் உருவாக்கப்பட்டு 25 வருடங்கள் பூர்த்தியாகிவிட்டது என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

ads
Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply