வெண்டைக்காய் புளி குழம்பு

Loading...

வெண்டைக்காய் புளி குழம்பு

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் – 200 gm
வெங்காயம் – ஒன்று
தக்காளி – ஒன்று
கறிவேப்பிலை – ஒரு கொத்து
மிளகாய்த்தூள் – 1 tbl. spoon
தனியாதூள் – 2 tbl. spoon
மஞ்சள்தூள் – 1/2 tspoon
புளி – எலுமிச்சை அளவு
உப்பு – தேவைகேற்ப
தேங்காய் விழுது – அரை கப்
சீரகம் – 1 tspoon
வெந்தயம் – 1 tspoon
நல்லெண்ணெய் – தேவைகேற்ப
வெண்டைக்காய் புளி குழம்பு


செய்முறை:

வாணலியில் எண்ணெய் ஊற்றி வெந்தயம் ,சீரகம்மற்றும் கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். பிறகு வெங்காயத்தை போட்டு வதக்கவும் அடுத்து தக்காளியை போட்டு நன்கு வதக்கிய பிறகு வெண்டைக்காயை போட்டு வதக்கவும், பிறகு மிளகாய்த்தூள்,மஞ்சள் தூள்,தனியாதூள் போட்டு புளி கரைசலை ஊற்றி கொதிக்க விடவும், ஒரு கொதி வந்த பின்னர் அரைத்த தேங்காய் விழுதை போட்டு சுவைக்கேற்ப உப்பு போட்டு நன்கு ஏழு நிமிடம் கழித்து இறக்கிவிடவும்.
சுவையான வெண்டைக்காய் புளி குழம்பு தயார்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply