வெஜ் கப்ஸா

Loading...

வெஜ் கப்ஸாபாஸ்மதி அரிசி – 1/2 கிலோ,
எண்ணெய் + பட்டர் 50 கிராம்,
காய்ந்த எலுமிச்சை – 1,
பெரிய வெங்காயம் – 1,
இஞ்சி-பூண்டு பேஸ்ட் – சிறிது,
கேரட் – 50 கிராம்,
பீட்ரூட் – 50 கிராம்,
கார்ன் – 50 கிராம்,
பிராக்கோலி – 50 கிராம்,
தக்காளி பேஸ்ட் – 25 கிராம்,
தக்காளி – 1/2 பழம்,
மேகி அல்லது ஏதேனும் வெஜிடபுள் ஸ்டாக் – 1 துண்டு,
அரபிக் கப்ஸா மசாலா- (கருப்பு மிளகுத் தூள் – 1/2 டீஸ்பூன், சீரகம் – 3/4 டீஸ்பூன், பப்பரிக்கா – 1/4 டீஸ்பூன், முழு தனியா – 1 டீஸ்பூன், கிராம்பு – 2, ஜாதிக்காய் – 1/4 டீஸ்பூன், பட்டை – 1 இஞ்ச் துண்டு, ஏலக்காய் –

எப்படிச் செய்வது?

வெஜிடபுள் ஸ்டாக்குடன் 3 1/2 டம்ளர் தண்ணீரை ஊற்றிக் கொதிக்க வைக்கவும். அரிசியைக் களைந்து, 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். குக்கரில் எண்ணெய் + பட்டரை காய வைத்து காய்ந்த எலுமிச்சை, வெங்காயம், இஞ்சி-பூண்டு பேஸ்ட் சேர்த்து நன்கு வதக்கவும். அத்துடன் தக்காளி, தக்காளி பேஸ்ட், அரபிக் கப்ஸா மசாலாவை சேர்த்து கிளறவும். பிறகு காய்களை சேர்த்து 5 நிமிடங்கள் வேகவிடவும். பிறகு, அரிசியை தண்ணீரை வடித்து வறுத்து சமப்படுத்தி வைக்கவும். காய் வெந்ததும் அதில் வெஜிடபுள் ஸ்டாக்கை ஊற்றி கொதிக்க விட்டு வறுத்து வைத்துள்ள அரிசியை சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்கவிடவும். 2, 3 விசில் விட்டு இறக்கவும், நான்வெஜ் பிரியர்கள் மட்டன், சிக்கனிலும் செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply