வெஜிடேபிள் சட்னி

Loading...

வெஜிடேபிள் சட்னி
தேவையானவை :
புடலங்காய் – ஒன்றில் பாதி ,சவ்சவ் – ஒன்றில் பாதி ,குட மிளகாய் – ஒன்று,பச்சை மிளகாய் – 5
தக்காளி – 2,புளி – சிறிய நெல்லிக்காய் அளவு,புதினா இலை – சிறிதளவு ,கொத்தமல்லித்தழை – சிறிதளவு ,

தாளிக்க :

கடுகு , உளுத்தம் பருப்பு – ஒரு டீஸ்பூன் ,கறீவேப்பிலை சிறிதளவு ,எண்ணெய் – 50 மி.லி ,பெருங்காயம் – ஒரு டீஸ்பூன்

செய்முறை :
அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் தேவயானவற்றிள், புளி தவிர மற்ற எல்லா பொருள்களையும் சேர்த்து வதக்கி சூடு ஆறியதும் மிக்ஸியில் அரைத்து,அதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்துக்கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளித்து சட்னியில் சேர்த்து கிளறி பரிமாறவும்.

Loading...
Rates : 0
Loading...
VTST BN