வெஜிடபுள்   பிரியாணி

Loading...

வெஜிடபுள்   பிரியாணி
என்னென்ன தேவை?

பாஸ்மதி அரிசி – 1 கப்

தக்காளி – 1

சோம்பு – 1/4 டீஸ்பூன்

இஞ்சி – சிறிய துண்டு

புதினா இலை – 15

கிராம்பு – 1

ஏலக்காய் – 1

பச்சை மிளகாய் – 2

மிக்ஸட் வெஜிடபுள்ஸ் (கேரட், பீன்ஸ், காலிஃப்ளவர், பட்டாணி) – 3/4 கப்

உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – 2 டேபிள்ஸ்பூன்.


எப்படிச் செய்வது?
அரிசியைக் கழுவி 1 1/2 கப் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். இஞ்சி, சோம்பு, புதினா, பச்சை மிளகாய், கிராம்பு, தக்காளி ஆகியவற்றைச் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

குக்கரில் எண்ணெய் சேர்த்து, அரைத்த விழுதைச் சேர்த்து தீயை சிறியதாக வைத்து 5 நிமிடங்களுக்கு நன்கு வதக்கவும். அதில் காய்களைப் போட்டுக் கிளறவும். 5 நிமிடம் கழித்து அரிசி மற்றும் தண்ணீர்க் கலவையைச் சேர்த்து உப்பு போட்டு, குக்கரை மூடி 1 விசில் வரும் வரை வேக விடவும்.

பிறகு மிகக் குறைந்த தீயில் 10 நிமிடங்களுக்கு வைத்திருந்து அடுப்பை அணைக்கவும். கவனமாகக் கிளறி, சூடாகப் பரிமாறவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply