வெஜிடபிள் தோசை

Loading...

வெஜிடபிள் தோசை

தேவையான பொருட்கள்:

இட்லி/தோசை மாவு – 3 கப்
குடைமிளகாய் – 1
கேரட் – 1
முட்டைக்கோஸ் துருவல் – 1/2 கப்
தேங்காய்த் துருவல் – 4 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் சீரகத்தூள் – 1 டீ ஸ்பூன்
மல்லித்தூள் – 1/2 டீ ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகாய்த்தூள் – 1/2 டீ ஸ்பூன்செய்முறை:

குடமிளகாயைக் கழுவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
கேரட்டை தோல் சீவி துருவிக் கொள்ளவும்.
முட்டைக்கோஸை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு நறுக்கிய குடைமிளகாய், கேரட்,முட்டைக்கோஸ் துருவல் என ஒன்றன் பின் ஒன்றாகச் சேர்த்து நன்கு வதக்கவும்.
இதனுடன் வரமிளகாய் சீரகத்தூள்,மல்லித்தூள்,மிளகாய்த்தூள்,உப்பு,தேங்காய்த் துருவல் சேர்க்கவும்.
நன்றாக இதை வதக்கிய பின் லேசாக ஆறவிட்டு தோசை மாவுடன் கலக்கவும்.
அடுப்பில் தோசைக் கல்லை வைத்து சூடாக்கவும். கல் சூடானதும் மிதமான தணலில் வைத்து, கலந்து வைத்துள்ள மாவை தோசைகளாகச் சுட்டு எடுக்கவும்.
எண்ணெய் விட்டு இருபுறமும் பொன்னிறமாகச் சுட்டு எடுக்கவும்.
சூடாக தேங்காய்/மிளகாய் சட்னியுடன் பரிமாறவும்.

குறிப்பு:

வெங்காயம்,மல்லிஇலை சேர்த்தும் செய்யலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply