வெங்காய குழம்பு

Loading...

வெங்காய குழம்பு

தேவையான பொருட்கள்:

நல்லெண்ணெய் – 6 ஸ்பூன் (நல்லெண்ணெய் உடம்புக்கு நல்லதுதான். பயபடாம நெறைய சேர்த்துகோங்க)
கடுகு, உளுந்து, கருவேப்பில்லை – கொஞ்சம்
வெந்தயம் – கால் ஸ்பூன் (optional)
பெரிய வெங்காயம் – 2 பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3 பொடியாக நறுக்கியது
மஞ்சள் தூள் – கால் ஸ்பூன்
புளி – நெல்லிக்காய் அளவு (புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளுங்கள்)
உப்பு


செய்முறை:

கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து, வெந்தயம், கருவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளுங்கள்.
வெங்காயம், பச்சைமிளகாய் இரண்டையும் சேர்த்து நன்கு வதக்கி கொள்ளுங்கள்.
உப்பு, மஞ்சள் தூள், புளி கரைசல் + அரை டம்ளர் தண்ணீர் சேர்த்து மிதமான தீயில் கொதிக்க விடுங்கள்.
தண்ணீர் வற்றியதும் சூடாக பரிமாறுங்கள்.
சாம்பார் சாதம், தயிர் சாதத்திற்கு நல்ல காம்பினேசன்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply