விரைவில் APPLE PAY வசதி

Loading...

விரைவில் APPLE PAY வசதிஅப்பிள் நிறுவனமானது தனது பொருட்களை இலகுவாக கொள்வனவு செய்யும் வசதியை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் முகமாக Apple Pay வசதியினை அறிமுகம் செய்திருந்தமை அறிந்ததே.

ஆரம்பத்தில் அமெரிக்கா மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் மட்டும் இவ்வசதி அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. அந் நாடுகளில் இச்சேவை சிறந்த வரவேற்பை பெற்றிருந்தது.

இதனால் சில மாதங்களுக்கு முன்னர் அவுஸ்திரேலியா, சீனா, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் அறிமுகம் செய்திருந்தது.

இந் நிலையில் தற்போது சுவிட்சர்லாந்திலும் இவ்வசதி அறிமுகம் செய்யப்படவுள்ளது.

இதன்படி இம் மாதம் 13ம் திகதி முதல் சுவிட்ஸர்லாந்து மக்கள் Apple Pay சேவையினைப் பெற்றுக்கொள்ள முடியும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை அடுத்த வாரம் (எதிர்வரும் திங்கட்கிழமை) இடம்பெறவுள்ள WWDC 2016 மாநாட்டில் எதிர்பார்க்கலாம்.

இதேவேளை அப்பிளின் புதிய ஸ்மார்ட் தொலைபேசி தொடர்பான தகவல்களும் இதன்போது வெளியிடப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply