விய‌ர்‌க்குருவை‌ப் போ‌க்க எ‌ளிய வ‌ழிக‌ள்

Loading...

விய‌ர்‌க்குருவை‌ப் போ‌க்க எ‌ளிய வ‌ழிக‌ள்பொதுவாக கோடைக் காலத்தில் வெயிலுக்கும், வியர்வைக்கும், வியர்க்குருவிற்கும் குறைவிருக்காது. பலரும் வியர்க்குரு வந்து அதிக அவதிப்படுவார்கள்.
இதற்கு சாதம் வடித்த தண்ணீரை வியர்க்குரு வந்த இடங்களில் தடவினால் கொஞ்சம் கொஞ்சமாக அவை மறைந்துவிடும்.
பன்னீருடன் சந்தனத்தைக் கரைத்து வியர்க்குரு வந்த இடங்களில் தடவிவிட்டால் விரைவில் வியர்க்குரு மறையும்.
அதிகமான அளவு வியர்வை வெளியேறுவதைத் தடுப்பதே வியர்க்குருவைக் கட்டுப்படுத்தும் முதல் வழியாகும்.
அதிகமாக வியர்க்கும்போது குளிப்பதோ, முகம் கழுவுவதோ செய்யக் கூடாது. அது உடலுக்கும் ஒத்துக் கொள்ளாது. வியர்வை நின்ற பிறகே குளிக்க வேண்டும்.
அதிக அளவு சோப்புகளையும் கோடை காலத்தில் பயன்படுத்த வேண்டாம். அதிகமாக வியர்க்கும்போது பவுடர் பூச வேண்டாம். நன்றாக கழுவி துடைத்த பிறகே பவுடரை பூச வேண்டும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply