விந்தணு திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க உதவும் இயற்கை உணவுப் பொருட்கள்

Loading...

விந்தணு திறன் மற்றும் உற்பத்தியை அதிகரிக்க உதவும் இயற்கை உணவுப் பொருட்கள்வேலை மற்றும் வாழ்வியல் மாற்றத்தின் காரணமாக ஆண்களுக்கு விந்தணு திறன் மற்றும் உற்பத்தி குறைபாடு ஏற்படுகிறது. இதற்கு ஆங்கில மருந்துகள் தற்காலிக தீர்வு மட்டுமே தரவல்லது. மற்றும் இவற்றின் மூலமாக பக்கவிளைவுகள் ஏற்படும் அபாயங்கள் இருக்கின்றன.

நமது உணவில் பயன்படுத்தும் சில உணவுகளே இதற்கு சிறந்த தீர்வளிக்க கூடியதாகும். சீரகம், வில்வபட்டை இரண்டையும் நன்கு இடித்து பொடியாக்கி நெய்யில் குழைத்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். தாளிக்கீரையை சுத்தம் செய்து பருப்புடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வந்தால் விந்து குறைபாடு குறையும்.

எள்ளுப்பூவை எடுத்து சுத்தம் செய்து பசும்பாலில் போட்டு நன்கு காய்ச்சி சாப்பிட்டு வந்தால் ஆண்மை அதிகரிக்கும். புளியங்கொட்டையை நன்கு இடித்து பொடி செய்து அதனுடன் ஓமமத்தையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விந்து உற்பத்தி அதிகரித்து, ஆண்மை குறைப்பாடு குறையும்.தேங்காய் துவையலில் கசகசாவை சேர்த்து வைத்து அரைத்து உணவுடன் சாப்பிட்டு வந்தால் ஆண்மை குறைபாடு குறையும்.

ஆண்மை நீங்க மற்றும் விந்தணு அதிகரிக்க அத்திப்பழத்தை 41 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சரியாகும். விந்து அதிகரிக்க, அரசமரத்தின் விதையை தூள் செய்து அதை சாப்பிட்டு வருதல் நல்ல பயன் தரும். இதனால், ஆண்மை குறைப்பாடு குறையும். இரவில் பேரீச்சம்பழத்தை ஆட்டுப்பாலில் ஊறவைத்து மறுநாள் காலையில் ஏலக்காய் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை பெருகும்.

பாதாம் பருப்புகளுடன், ஆறு மிளகையும் தூளாக்கி பாலுடன் இரவில் அருந்தி வந்தால் விந்து உற்பத்தி மேம்படும் அதனால் விரைவில் ஆண்மை குறைபாடுகளில் இருந்து தீர்வு பெறலாம். பலா பிஞ்சினை ச‌மைத்து மதிய உணவில் சேர்த்து சாப்பிட்டு வர‌ விந்து நன்கு உற்பத்தி அதிகரித்து ஆண்மை குறைப்பாடு நீங்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply