விந்தணு உற்பத்தியை பாதிக்கும் சில அன்றாட செயல்பாடுகள்

Loading...

விந்தணு உற்பத்தியை பாதிக்கும் சில அன்றாட செயல்பாடுகள்நமக்கு தெரிந்து நடக்கும் தீங்குகளை விட, நமக்கே தெரியாமல் நடக்கும் தீங்குகள் தான் அதிகம். இதற்கெல்லாமா கொள்வது என்று அந்நியனில் கேட்பது போல தான். இந்த செயல்களால் எல்லாமா விந்தணு உற்பத்தி சீர்கெடும் என்று பலரும் அறிவது இல்லை. ஆம், நமக்கே தெரியாமல் நாம் செய்யும் சில அன்றாட செயல்பாடுகள் விந்தணு உற்பத்தியை பெருமளவில் பாதிக்கிறது…..சுடு நீர் தொட்டி குளியல்

சுடு நீர் தொட்டியில் குளித்தால், உடலில் உற்பத்தி செய்யப்படும் விந்தணுகளின் எண்ணிக்கை குறையும். எப்படியெனில் பொதுவாக ஆண்களின் விரைகள் எப்போதும் மற்ற உறுப்புகளை விட சற்று குளிர்ச்சியாக இருக்கும், இருக்கவும் வேண்டும். ஆனால் அவ்வாறு குளிர்ச்சியின்றி, விரைகளின் வெப்பமானது 98 டிகிரிக்கு மேல் அதிகரித்தால், அந்த வெப்பம் ஆண்களின் விந்தணுகளை அழித்துவிடும். ஆகவே ஆண்கள் குழந்தைகள் பெற நினைக்கும் போது, சுடு நீர் தொட்டிகளில் குளிப்பதை தவிர்ப்பது நல்லது.உள்ளாடைகள்

நிறைய ஆய்வில் மிகவும் இறுக்கமாக இருக்கும் உள்ளாடைகளை அணிந்தால், விந்தணுக்களின் உற்பத்தி தடைபடும் என்று கண்டறியப்பட்டுள்ளது. ஏனெனில் அவ்வாறு நீண்ட நேரம் இறுக்கமான உள்ளாடையை அணிவதால், விரைகள் அதிக வெப்பமடைந்து, விந்தணுகளின் எண்ணிக்கையை குறைத்துவிடுகிறது. எனவே எப்போதும் லூசாக இருக்கும் உள்ளாடையை அணிய வேண்டும்.மொபைல்

குழந்தை பெற நினைக்கும் போது, அதிகமாக மொபைல் பயன்படுத்துவதை நிறுத்திவிட வேண்டும். அதிலும் ஒரு ஆய்வில் ஆண்கள் ஒரு நாளைக்கு நான்கு மணிநேரத்திற்கு மேல் தொடர்ந்து மொபைலை பயன்படுத்தினால். விந்தணுக்களின் உற்பத்தி குறையும் என்று கூறுகிறது. ஏனெனில் ஆண்கள் தாங்கள் பயன்படுத்தும் மொபைலை, எப்போதுமே பேண்ட் பாக்கெட்டில் வைப்பதால், மொபைலிலிருந்து வரும் அதிர்வுகள், விரைகளை பாதிக்கிறது. எனவே தான், விந்தணுக்களும் பாதிக்கப்படுகின்றன. எனவே ஆண்கள் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைக்காமல் இருப்பது நல்லது.எடை அதிகம்

இன்றைய காலத்தில் ஒரே இடத்தில் உட்கார்ந்த வேலை செய்வோரின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதனால் அவர்களின் உடல் எடை அதிகரித்துவிடுவதோடு, அதன் காரணமாக பாலியல் சுரப்பிகளின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. பெண்கள் குண்டாக இருந்தால், அவர்களது ஈஸ்ட்ரோஜெனின் அளவு அதிகரிக்கும். ஆனால் அதுவே ஆண்கள் குண்டாக இருந்தால், அது விந்தணுக்களின் எண்ணிக்கையை குறைத்துவிடும். எனவே ஆண்கள் எப்போதும் தங்கள் உடல் எடையின் மீது அதிக கவனம் செலுத்துவதோடு, உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்ய வேண்டும்.ஆல்கஹால்

ஆல்கஹால் பருகுவதை, குழந்தைப் பெறுவதற்கு முயற்சிக்கும் போது குறைத்துவிட வேண்டும். ஏனெனில் அந்த ஆல்கஹால் ஆண்களின் விந்தணுக்களின் உற்பத்திக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். எப்படியெனில் ஆல்கஹால் பருகினால், உடலானது விந்தணுகளின் உற்பத்திக்கு தேவையான ஜிங்க் சத்தை உறிஞ்சவிடாமல் செய்துவிடும். ஆகவே குழந்தை பெறும் வரை இதனை தவிர்ப்பது மிகவும் நல்லது

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply