வாழைப்பழ தோசை

Loading...

வாழைப்பழ தோசை
தேவையானப் பொருட்கள்:

பச்சை வாழைப்பழம் – 4 (பழுத்தப் பழம்)
வெல்லம் – 100 கிராம்
சுக்குப் பொடி – 1/4 டீஸ்பூன்
ஏலக்காய் பொடி – 1/4 டீஸ்பூன்
மைதா மாவு – 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு – 2 டேபிள் ஸ்பூன்
நெய் – பொரிக்கத் தேவையான அளவு
உப்பு – 1 சிட்டிகை
முந்திரி – 5 (பொடியாக நறுக்கியது)


செய்முறை:

முதலில், பச்சை வாழைப்பழத்தை தோல் உரித்து நன்கு மசித்து வைத்துக் கொள்ளவும். அதில் வெல்லம், சுக்குப் பொடி, ஏலக்காய் பொடி, மைதா மாவு, அரிசி மாவு, உப்பு, முந்திரி இவற்றையெல்லாம் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு கலந்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு கடாயை அடுப்பில் வைத்து அதில் பொரிப்பதற்குத் தேவையான அளவு நெய்யை ஊற்ற வேண்டும்.

நெய் சூடேரியதும், அதில் கலந்து வைத்துள்ள மாவை ஒரு டீஸ்பூனில் எடுத்து ஊற்ற வேண்டும். நன்கு பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்தால் சுவையான வாழைப்பழ தோசை தயார்…!

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply