வாழைப்பழம் வால்நெட் கேக்

Loading...

வாழைப்பழம் வால்நெட் கேக்
தேவையானப் பொருட்கள்
உப்பு இல்லாத வெண்ணெய் – 1/4 கப் சர்க்கரை – 1 கப் மைதா – 1 கப் பேக்கிங் பவுடர் – 1 டீஸ்பூன்
பேக்கிங் சோடா – 1 டீஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ் – 1 டீஸ்பூன் பால் – மூன்றில் ஒரு பங்கு வாழைப்பழம் – ஒன்று வால்நெட்ஸ் – தேவையான அளவு


செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் சர்க்கரையையும் வெண்ணெய்யையும் ஒன்றாக சேர்த்து பிசைய வேண்டும். அத்துடன், பால் மற்றும் பழம் சேர்த்து கூழ் பதத்திற்கு கரைக்க வேண்டும். கட்டியாக இருந்தால் தேவைக்கு ஏற்ப பால் சேர்த்துக் கொள்ளலாம். மேலும் பேக்கிங் சோடா, வெண்ணிலா எசன்ஸ், பேக்கிங் பவுடர் போன்றவற்றை சேர்த்து நன்றாக கலந்து, சரியான பக்குவம் வந்த பின், வால்நெட்ஸைப் போட வேண்டும். எந்த வடிவத்தில் கேக் தேவையோ அதற்கு ஏற்ற வகையில் ஒரு பவுலை தேர்வு செய்து அதில் விட வேண்டும். பின்னர், அதனை மைக்ரோ ஓவனை ஒரு நிமிடம் ‘பிரீஹீட்’ செய்து அதன் பின் பவுலை ஓவனில் 6 நிமிடம் சைத்து எடுத்தால் கேக் தயார். மைக்ரோ ஓவன் இல்லாதவர்கள் வாஷர் இல்லாத குக்கரில் அலுமினிய பாத்திரத்தில் வைத்து வேக வைக்க வேண்டும். அலுமினிய பாத்திரத்தின் உள் சிறு ஸ்டாண்ட் வைத்து அதில் பாத்திரத்தை வைக்க வேண்டும். இல்லையெனில் கேக்கின் கீழ் கருப்பாக மாறும். 30 நிமிடம் ‘சிம்மில்’ வேக வைத்தால் கேக் கிடைத்துவிடும். கேக்கை எடுத்து அதன் மீது வால்நெட் மற்றும் வெட்டிய வாழைப் பழம் மற்றும் கிரீம் வைத்தும் அழகுபடுத்தலாம்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply