வாழைப்பழம் அள்ளித்தரும் நன்மைகள்

Loading...

வாழைப்பழம் அள்ளித்தரும் நன்மைகள் உலகம் முழுவதும் உள்ள மக்களால் அதிகம் உணரப்படாத அதிக சத்துக்கள் நிறைந்தது தான் முப்பழங்களில் ஒன்றான வாழைப்பழம். அனைத்து காலங்களிலும் ஏழை, எளிய மக்களால் வாங்கி விரும்பி சாப்பிடக்கூடியவாறு விலை குறைவில் மிகுந்த சத்துக்களை உள்ளடக்கிய வாழைப்பழத்தில் பல வகைகள் உண்டு. அதில் மஞ்சள் நிற பழமான பூவன் வாழைப்பழம், பச்சை வாழைப்பழம், ரஸ்தாளி, கற்பூர வாழைப்பழம், மொந்தன் வாழைப்பழம், கருவாழைப்பழம், செவ்வாழைப்பழம், நேந்திரம் வாழைப்பழம் போன்றவை குறிப்பிடத்தக்கவை.

பலர் அன்றாட உணவுடன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொள்வதை கெட்ட பழக்கமாக நினைக்கின்றனர். ஆனால் அப்படி நினைப்பதை தவிர்த்து, தினமும் உணவில் வாழைப்பழத்தை சேர்த்து வந்தால் நினைத்து பார்க்க முடியாத அளவில் நிறைய நன்மைகளைப் பெறலாம்.

ஒவ்வொரு நாளும் பூவன் வாழைப்பழத்தை சேர்த்துக் கொண்டால் செரிமான சக்தி அதிகரிப்பதோடு, உண்ணும் உணவை முழுச்சத்துள்ளதாகவும் மாற்றுகிறது.

ரஸ்தாளி வாழைப்பழம் மிகவும் சுவையாக இருப்பதுடன், மிகுந்த சத்துக்கள் நிறைந்தது. பொதுவாக எந்த வகையான வாழைப்பழத்தை சாப்பிட்டாலும், அவற்றின் நன்மைகள் ஒரே மாதிரி தான் இருக்கும்.

இதய நோய் வருவதற்கு முக்கிய காரணங்களில் ஒன்று இதயம் வலிமையாகவும், சீராகவும் செயல்படுவதற்கு தேவையான சத்துக்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளாதது தான். இத்தகைய இதயத்தின் வலிமைக்கு நேந்திரம் பழம் மிகவும் சிறந்தது. ஆகவே கிடைக்கும் போது நேந்திரம் பழத்தை தவறாமல் சாப்பிட்டு வாருங்கள்.

மொந்தன் வாழைப்பழம் உடல் உஷ்ணத்தை குறைக்கும். காமாலை நோயைக் குணப்படுத்தும்.

பச்சை வாழைப்பழம் பசிக்காவும், ருசிக்காகவும் சாப்பிடக்கூடியதே தவிர, அதில் சொல்லும் படி சத்துக்கள் அவ்வளவு இல்லை.

இருப்பதிலேயே செவ்வாழையில் சொல்லமுடியாத அளவில் சத்துக்கள் வளமாக உள்ளது. இத்தகைய சத்துக்களால் நரம்பு தளர்ச்சி குறையும், அதற்கு இப்பழத்தை 40 நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர வேண்டும். மேலும் செவ்வாழையில் வைட்டமின் ஏ வளமாக இருப்பதால், கண்களில் பிரச்சனைகள் இருந்தாலும் அவற்றை எளிதாக அகற்றிவிடும். அதுமட்டுமின்றி, பல், எலும்பு போன்ற உறுப்புகளை வலிமையாக்கும் சக்தியும் செவ்வாழைக்கு உள்ளது.

இறுதியாக ஆனால் முக்கியமாக, அன்றாடம் வாழைப்பழத்தை சாப்பிட்டு வந்தால், சருமம் பளபளப்புடன் இருப்பதோடு, சருமத்தின் மென்மைத்தன்மை அதிகரிக்கும். மலச்சிக்கல் இருந்தால் முற்றிலும் நீங்கிவிடும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply