வாய் துர்நாற்றம் மற்றும் வாயுப் பிரச்சனைக்கு உடனடி தீர்வளிக்கும் புதினா

Loading...

வாய் துர்நாற்றம் மற்றும் வாயுப் பிரச்சனைக்கு உடனடி தீர்வளிக்கும் புதினாதினமும் நாம் காய்கறி சந்தையில் பார்க்கும் ஒரு உணவுப் பொருள் மட்டுமல்ல புதினா. இது ஒரு சிறந்த மூலிகை உணவும் கூட. சொல்லப் போனால் இது ஒருவகை மூலிகை உணவென்றும், இதனால் பல உடல்நலக் கோளாறுகளுக்கு தீர்வுக் காண முடியும் என பலருக்கும் தெரியாது.

புதினாவை உணவில் சேர்த்து தான் சாப்பிட வேண்டும் என்றில்லை. வெறுமென அதை நீரில் கழுவி வாயில் மென்று கூட சாப்பிடலாம்.

தினமும் புதினாவை உணவில் சேர்த்துக் கொள்வதால் வாய் துர்நாற்றம் என்ற பிரச்சனையை தூர விரட்ட முடியும். மற்றும் புதினாவில் இருக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் செரிமான கோளாறுகளுக்கு நல்ல தீர்வளிக்கிறது. உங்கள் உடலில் செரிமான கோளாறு ஏற்படுவதற்கு முக்கிய காரணமே நார்ச்சத்து குறைபாடு தான், இதை சரி செய்ய நீங்கள் தானிய உணவுகளை டயட்டில் சேர்த்துக் கொள்ள வேண்டியது அவசியம்.

மேலும் புதினா, கர்ப்பக் காலத்தில் ஏற்படும் காலை நேர உடல்நல குறைபாட்டை சரி செய்ய வெகுவாக பயனளிக்கிறது. மற்றும் முகப்பரு, முகப்பொலிவு, பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வலி, நோய் தொற்று, இருமல், சளி, வயிற்றுவலி, வயிற்றுக் கோளாறு, வாந்தி, வயிற்று உப்புசம், ஆஸ்துமா, மூட்டுவலி, வாயுத்தொல்லை, மஞ்சள் காமாலை, பசியின்மை, மலச்சிக்கல், மூட்டுவலி, சிறுநீர் கழிக்க சிரமம், சிறுநீரில் கல், கல்லீரல் மற்றும் நுரையீரல் கோளாறுகள் போன்ற பல உடல்நலக் கோளாறுகளுக்கு சிறந்த நிவாரணியாக திகழ்கிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply