வாட்ஸ் அப்பில் தோன்றும் இந்த கனெக்ஷன் பிரச்சனையை சரி செய்ய

Loading...

வாட்ஸ் அப்பில் தோன்றும் இந்த கனெக்ஷன் பிரச்சனையை சரி செய்யவாட்ஸ் அப்பை தொடர்ச்சியாக பயன்படுத்திக் கொண்டிருக்கும் போது சில சமயம் அது திடீரென வேலை செய்யாமல் போய் விடும். இந்த ஷாக் அனுபவம் பலருக்கும் இருக்கும்.
வாட்ஸ் அப்பில் தோன்றும் இந்த கனெக்ஷன் பிரச்சனையை எப்படி சரி செய்யலாம் என்று பார்க்கலாம்.
முதலில் உங்களது ஸ்மாட் போனை ரீஸ்டார்ட் செய்யுங்கள். இதன் மூலம் போனில் உள்ள பல பிரச்சனைகள் சரி செய்யலாம். இல்லாவிட்டால் போனை சிறிது நேரம் பிளைட் மோடில் (Flight mode) போட்டு விட்டு மீண்டும் நார்மல் மோடுக்கு மாற்றலாம். ஸ்மார்ட் போனில் உள்ள வை-பை மற்றும் டேட்டா கனெக்ஷன் (data connection) சீராக வேலை செய்கிறதா என்பதை சரி செய்து கொள்ளுங்கள். உங்களது வை-பை கனெக்ஷன் ஆன் செய்யப்படிருந்தால் இந்த பிரச்சனை வராது. வை-பை கனெக்ஷன் இல்லாத இடத்தை விட்டு நகர்ந்து விட்டு செயலியை குறை கூறாதீர். அந்த சமயத்தில் மொபைல் டேட்டா சரியாக இருக்கிறதா என்பதை சரி செய்து கொள்ளுங்கள். இந்த அனுபவம் பலருக்கும் இருக்கும். வாட்ஸ் அப் செயலியில் பேக்கிரவுன்டு டேட்டா (Restrict background data) முடக்கப்பட்டுள்ளதா என்பதைச் சரி பார்க்க வேண்டும். மொபைல் டேட்டா கனெக்ஷனில் மட்டும் வாட்ஸ்ஆப் வேலை செய்யாமல், வை-பை கனெக்ஷனில் வேலை செய்யும் பட்சத்தில் ஏபிஎன் (APN) செட்டிங்ஸ் மாற்றவேண்டும். இதனை மொபைல் சரி செய்பவரிடம் கொண்டு சென்று மாற்றிக் கொள்ளலாம். இணையவசதி சரியாக இருந்தும் வாட்ஸ் அப் சரியாக வேலை செய்யாவிட்டால் ஆப் ஸ்டோர் (App store) சென்று வாட்ஸ் அப் செயலியை அப்டேட்(Update) செய்ய வேண்டும். இந்த வழிமுறைகளில் எதுவும் கைகொடுக்காத பட்சத்தில் வாட்ஸ் அப் செயலியை அன் இன்ஸ்டால்(uninstall) செய்து மீண்டும் இன்ஸ்டால் (Install) செய்ய வேண்டும்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply