வாட்ஸ்ஆப்க்கு போட்டியாக களமிறங்கும் GOOGLE | Tamil Serial Today Org

வாட்ஸ்ஆப்க்கு போட்டியாக களமிறங்கும் GOOGLE

Loading...

வாட்ஸ்ஆப்க்கு போட்டியாக களமிறங்கும் GOOGLEவாட்ஸ்ஆப், மெசன்ஜர் மற்றும் ஸ்னாப்சாட் போன்ற குறுந்தகவல் செயலிகளுக்கு கடும் போட்டியளிக்கும் விதமாக புதிய செயலி ஒன்றை கூகுள் நிறுவனம் ரகசியமாக உருவாக்கி வருலாம் என இணையத்தில் செய்தி குறிப்புகள் வேகமாக பரவி வருகின்றது. வால்ஸ்ட்ரீட் ஜர்னல் எனும் இணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில் ‘சாட்பாட்’ எனும் பெயரில் கூகுள் நிறுவனம் இதற்கான பணிகளில் ஈடுப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளது.

மொபைல் போன் செயலிகளில் இன்ஸ்டன்ட் மெசேஜிங் சார்ந்த சேவைகள் அதிக பிரபலமாக இருந்து வருகின்றது. சமீபத்திய ஆய்வுகளில் சுமார் 200 கோடி பேர் இந்த சேவைகளை பயன்படுத்தி வருவதாக தெரியவந்துள்ளது. இருந்தும் கூகுள் நிறுவனத்தின் ஹேங்அவுட்ஸ் சேவையானது பெரும்பாலான பயனர்களை ஈர்க்கவில்லை என்றே கூற வேண்டும்.

வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்தியில் ‘சாட்பாட்’ சேவையில் பயனர்கள் கேள்விகளை கேட்க முடியும் என்றும் கேள்விகளுக்கான பதில்களை இந்த ரோபோட் கூகுள் தேடல் அல்லது மற்ற சேவைகளை கொண்டு பதில் அளிக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Loading...
Rates : 0
ads
VTST BN