வாட்ஸ்அப்பில் வெளியானது வீடியோ call வசதி

Loading...

வாட்ஸ்அப்பில் வெளியானது வீடியோ call வசதிபரிசோதனை அளவில் மட்டுமே இருந்த வாட்ஸ்அப்பின் வீடியோ call வசதி விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

ஜெர்மனியை சேர்ந்த இணையதளத்தில் வெளியாகியுள்ள சில ஸ்கிரீன்ஷாட்களின் மூலம் வாட்ஸ்அப்பில் வீடியோ call வசதி வெளியிடப்பட்ட தகவல் தெரியவந்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய வெர்ஷனை (v2.12.16.2) பயன்படுத்தும் சில ஐ.ஒ.எஸ். வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வீடியோ call கிடைத்துள்ளது.

தற்போது வெளிவந்துள்ள ஸ்கிரீன்ஷாட்களில் இடது பக்கம் மியூட் பட்டனும், நடுவில் அழைப்பினை துண்டிக்கும் பட்டனும், வலது ஓரம் கேமராவிற்கு செல்லும் பட்டனும் உள்ளது.

எனவே, விரைவில் ஆப்பிள் போனை பயன்படுத்துபவர்களுக்கு வாட்ஸ்அப் வீடியோ call வசதி கிடைக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் ஆண்ட்ராய்ட் பயனாளர்கள் சிறிது காலம் காத்திருக்க நேரிடலாம்.

வாட்ஸ் அப்பில் வீடியோ காலிங் வசதியானது ஆப்பிளின் பேஸ்டைம் அப்ளிகேஷனுக்கு போட்டியாக கொண்டுவரப்பட்டுள்ளது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply