வாட்ஸப்பில் ஆவணங்களை அனுப்ப புதிய வசதி

Loading...

வாட்ஸப்பில் ஆவணங்களை அனுப்ப புதிய வசதிவாட்ஸப்பில் இனிமேல் ஆவணங்களையும் அனுப்பும் வசதி புதியதாக இணைக்கப்பட்டுள்ளது.

வாட்ஸப் புதிய வெர்சன் வி 2.12.453 ஆண்ட்ராயிட் போன்களிலும் வி 2.12.14 ஐஓஎஸ் போன்களிலும் இனிமேல் ஆவணங்களை அனுப்ப தனி வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாகுமெண்ட்டுகளை அனுப்ப தனி ஐகானும் உருவாக்கப்பட்டுள்ளது. புதிய வாட்சப் வெர்சன்களை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் கம்பெனி ஆப்புகளில் டவுண்லோடு செய்து கொள்ளலாம்.

இதற்கு முன் பி.டி.எப். பைல்களை மட்டுமே வாட்ஸப்பில் பகிர்ந்து கொள்ள முடியும். தற்போது வாட்ஸப்பில் 6 ஐகான்கள் உள்ளன. புதிய வெர்சனில் வீடியோ,புகைப்படங்கள் ஒன்றாக இணைக்கப்பட்டு ஒரே ஐகானாக மாற்றப்பட்டுள்ளது.

அதே வேளையில் ஆவணங்களை யாருக்கு அனுப்புகிறமோ? அவரிடமும் லேட்டஸ்ட் வெர்சன் வாட்ஸப் வெர்சன் இருக்க வேண்டும். அப்போதுதான் அவர் ஆவணங்களை பெற முடியும்.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply