வளையும் தன்மை உடைய கொங்கிரீட் கற்களை உருவாக்க முயற்சி

Loading...

வளையும் தன்மை உடைய கொங்கிரீட் கற்களை உருவாக்க முயற்சிகட்டிட வடிவமைப்பில் கொங்கிரீட் கற்களின் பங்கு இன்றியமையாததாகும்.
தற்போதை தொழில்நுட்பத்தில் உருவாக்கப்படும் குறித்த கற்கள் வலிமை மிக்கனவாக இருந்த போதிலும் உயர் தகைப்புக்களின்போது வெடித்தல் அல்லது நொருங்குதலுக்கு உள்ளாகக் கூடியவை.
இதனைக் கருத்தில் கொண்டு வளையும் தன்மை அல்லது மீள்தன்மை உடைய கொங்கிரீட் கற்களை உருவாக்கும் முயற்சி மேற்காள்ளப்பட்டிருந்தது.
இம் முயற்சியில் சிங்கப்பூரில் உள்ள நன்யாங் தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் வெற்றி கண்டுள்ளனர்.
தற்போது வரை உருவாக்கப்படும் கொங்கிரீட் கற்களின் உள்ளீடுகளாக சிமெந்து, கிரவல், மணல் மற்றும் நீர் என்பன காணப்படுகின்றன.

ஆனால் தற்போது உருவாக்கப்பட்டுள்ள வளையக்கூடிய கொங்கிரீட்டில் மைக்ரோ பைபர்களை உள்ளடக்கிய ConFlexPave எனும் கலவையினைக் கொண்டுள்ளது.
இதன் காரணமாக இரு மடங்கு வலிமை உடையனவாகவும், வளையும் தன்மை கொண்டவையாகவும் உள்ளன.

Rates : 0
.
Loading...
VTST BN
Loading...

Leave a Reply