லெமன் டீயில் முகம் கழுவினால் நடக்கும் மேஜிக் என்னவென்று தெரியுமா?

Loading...

லெமன் டீயில் முகம் கழுவினால் நடக்கும் மேஜிக் என்னவென்று தெரியுமாஅகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது போல நமது உள்ளத்தை வெளிக் கொண்டு வரும் முகத்தினை அழகாய் வைத்துக் கொள்வதில் என்ன தவறு.

சரும அழகினை மெருகூட்ட அடிக்கடி புதிதாய் க்ரீம்களை வாங்கி ஏதாவது பரிசோதிக்க வேண்டுமென்பதில்லை. வீட்டில் எளிய பொருட்களைக் கொண்டு உங்களை அழகு இளவரசியாய் மாற்றிக் கொள்ள முடியும். அப்படிப்பட்ட ஒரு டிப்ஸ் தான் முகத்தில் லெமன் டீ உண்டாக்கும் அற்புதங்கள்.


லெமன் டீ செய்யும் முறை :

ஒரு கப் நீரில் ஒரு ஸ்பூன் தேயிலை பொடியை போடுங்கள். நன்றாக கொதித்ததும், இறக்கி வடிகட்டுங்கள். அதனுள் எலுமிச்சை சாறினை பிழிந்தால், லெமன் டீ தயார். இந்த டீயினால் முகத்தை காலை மாலை என இரு வேளைகளிலும் கழுவுங்கள். இதனால் என்ன பலன்கள் உண்டாகும் என பார்க்கலாமா.


முகப்பருக்கள் நெருங்காது :

டீன் ஏஜ் வயதினருக்கு முகப்பரு இருந்தால், இந்த கிளென்சர், அதனை எதிர்த்து போராடும். முகத்தில் முகப்பருவினால் வரும் தழும்பினை மறையச் செய்யும்.


கரும்புள்ளி :

முகத்தில் ஏற்படும் கரும்புள்ளிகளை போக்கச் செய்யும். முகத்தில் வெயிலினால் ஏற்படும் கருமையையும் நீக்கிவிடும். முகத்தை சுத்தமாக மாசு மருவின்றி இருக்க. இந்த லெமன் டீ அற்புதமாய் பலன் தரும்.


எண்ணெய் சருமத்திற்கு :

எண்ணெய் சருமம் முகப்பரு, கரும்புள்ளி போன்ற பிரச்சனைகளுக்கு காரணமாகும். காலை மாலை என இரு வேளையும் லெமன் டீயினால் முகம் கழுவினால், சருமத்தில் அதிகப்படியான எண்ணெய் சுரப்பதை தடுக்கலாம்.


பற்கள் வெள்ளையாக :

உங்கள் பற்களில் விடாப்படியான மஞ்சள் கறை இருந்தால், லெமன் டீயினை முயற்சித்துப் பாருங்கள். பல் விளக்கியதும், வாயில் சிறிது லெமன் டீயினை வைத்துக் கொண்டு, ஒரு நிமிடம் கொப்பளியுங்கள். இப்படி தொடர்ந்து செய்தால், எப்படிப்பட்ட மஞ்சள் கறையும் போய் விடும்.


இயற்கை கிளென்சர் :

முகத்திலுள்ள அழுக்குகளை நீக்க கடைகளில் வாங்கும் கிளென்சரை விட மேலானது இந்த லெமன் டீ. இது சருமத்தில் உள்ளே சென்று, அழுக்குகளை வெளியேற்றுகிறது.

எலுமிச்சையிலுள்ள விட்டமின் சி மற்றும் ஆன்டி ஆக்ஸிடென்ட் சருமத்தில் தங்கியிருக்கும் இறந்த செல்களை அகற்றுகிறது. சருமம் சுத்தமாகவும், சுருக்கங்கள் இல்லாமலும் இருக்கும்.

தேயிலை மற்றும் எலுமிச்சை குணங்களால் நம் சருமம் இன்னும் மெருகேறும். நீங்களும் வீட்டினில் முயன்று பாருங்கள். நிச்சயம் பலன் கிடைக்கும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply