லக்னாவி கேப்சிகம் மசாலா

Loading...

லக்னாவி கேப்சிகம் மசாலா
தேவையானவை:
வெங்காயம், தக்காளி – தலா ஒன்று, இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன், மிளகாய்த்தூள், கரம்மசாலாத்தூள் – தலா அரை டீஸ்பூன், நறுக்கிய குடமிளகாய் (பச்சை, சிவப்பு, மஞ்சள் – 3 நிறங்களிலும்) – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
வறுத்து அரைக்க: சீரகம் – கால் டீஸ்பூன், தனியா – அரை டீஸ்பூன், பட்டை – ஒரு சிறிய துண்டு, ஏலக்காய் – ஒன்று, முந்திரிப் பருப்பு – 8.

செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயத்தை நன்கு வதக்கிக் கொள்ளவும். வறுத்து அரைக்க வேண்டிய பொருட்களை வறுத்து… வதக்கிய வெங்கா யம், தக்காளி மற்றும் இஞ்சி – பூண்டு விழுதுசேர்த்து நன் றாக அரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெயைச் சூடாக்கி, அரைத்த மசாலாவை போட்டு வதக்கி, மிளகாய்த் தூள், கரம்மசாலாத்தூள், உப்பு சேர்த்து, நறுக்கிய குடமிளகாய் சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு, 5 நிமிடத்துக்குப் பிறகு அடுப்பை அணைத்துவிடவும்.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply