ரிசர்வ் வங்கியின் மங்காத்தா ஸ்டைலில் இருந்து திருட்டு

Loading...

ரிசர்வ் வங்கியின் மங்காத்தா ஸ்டைலில் இருந்து திருட்டு

2005-ம் ஆண்டிற்கு முன்பு அச்சிடப்பட்ட ரூபாய் நோட்டுகளையும், கிழிந்த மற்றும் அழுக்கான ரூபாய் நோட்டுகளையும் ரிசர்வ் வங்கியில் ஒப்படைத்து புதிய நோட்டுகளாக மாற்றிக்கொள்வது வங்கிகளின் நடை முறைகளில் ஒன்று. இதற்காக அந்தந்த வங்கிகளில் தனிப்பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த தனிப் பிரிவு அதிகாரிகளிடம் பொதுமக்கள் பழைய ரூபாய் நோட்டுகளை ஒப்படைத்து புதிய ரூபாய் நோட்டுகளாக பெற்றுக்கொள்ளலாம். சேலத்தில் இருந்து சென்னைக்கு வங்கிகளின் மூலம் இவ்வாறு சேகரிக்கப்படும் கிழிந்த மற்றும் பழைய ரூபாய் நோட்டுகள் ரிசர்வ் வங்கி தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு புதிய நோட்டுகள் பெறப்படுவது வழக்கம். அந்த வகையில் சேலம் கோட்டத்தில் உள்ள வங்கிகளில் சேகரிக்கப்பட்ட ரூபாய் நோட்டுகளை சென்னையில் உள்ள ரிசர்வ் வங்கியில் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் இரவு சேலத்தில் இருந்து சென்னை புறப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் மூலம் பணத்தை பாதுகாப்பாக கொண்டு வர வங்கி அதிகாரிகள் முடிவு செய்தனர். ரூ.342¾ கோடி ரூபாய் நோட்டுகள் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியின் ஒருங்கிணைப்பில், இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி உள்பட 5 வங்கிகள் சார்பில் பொதுமக்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட ரூ.342¾ கோடி ரூபாய் நோட்டுகள் தனி ரெயில் பெட்டியில் ஏற்றப்பட்டது. இந்த ரூபாய் நோட்டுகள் 226 மரப்பெட்டிகளில் சீல் வைக்கப்பட்டு ரெயிலில் நடுப்பெட்டியாக (ரெயில் பெட்டி எண்: எஸ்.ஆர். 08831) இணைக்கப்பட்டிருந்தது. பணம் வைக்கப்பட்டுள்ள பெட்டிக்கு பாதுகாப்புக்காக ஒரு உதவி கமிஷனர், ஒரு இன்ஸ்பெக்டர், ஒரு சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் 4 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இவர்கள் மற்றொரு பெட்டியில் இருந்தனர். நேற்று முன்தினம் இரவு 9.45 மணிக்கு சேலத்தில் இருந்து இந்த ரெயில் புறப்பட்டது. அதிர்ச்சி அதிகாலை 5 மணிக்கு, இந்த ரெயில் சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்திற்கு வந்தது. ரெயில் பெட்டியில் பாதுகாப்பாக கொண்டு வரப்பட்ட பணத்தை பத்திரமாக கொண்டு செல்வதற்காக வங்கி அதிகாரிகள் மற்றும் போலீசார் பார்சல் அலுவலகத்தில் காத்திருந்தனர். ரெயில் வந்தடைந்ததும், பணம் வைக்கப்பட்டிருந்த ரெயில் பெட்டியை சீல் உடைத்து அதிகாரிகள் உள்ளே சென்றனர். அப்போது பணம் வைக்கப்பட்டிருந்த பெட்டிகளில் 3 பெட்டிகள் சீல் உடைக்கப்பட்டிருந்ததைப் பார்த்து வங்கி அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. மேல்கூரையில் துளை இதைத்தொடர்ந்து சம்பந்தப்பட்ட பெட்டிக்குள் சென்று போலீசார் சோதனையிட்டனர். சீல் வைக்கப்பட்ட ரெயில் பெட்டிக்குள் இருந்த பணப்பெட்டி உடைக்கப்பட்டிருப்பது பெரிய குழப்பத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து ரெயில் பெட்டி முழுவதும் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது அவர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. சீல் வைக்கப்பட்ட ரெயில் பெட்டியின் மேற்கூரையில் சதுரவடிவில் ஒரு ஆள் நுழையக்கூடிய அளவிற்கு துளை போடப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது. ரெயில், சேலத்தில் இருந்து சென்னை வந்தபோது, யாரோ சில மர்ம நபர்கள் ரெயில் கூரையில் அமர்ந்து, அதில் துளைபோட்டு உள்ளே இறங்கி மரப்பெட்டிகளில் இருந்த பணத்தை கொள்ளையடித்து விட்டு தப்பிச்சென்று இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து ரெயில்வே ஐ.ஜி.ராமசுப்பிரமணி, எஸ்.பி.விஜயகுமார், பாதுகாப்பு படை (ஆர்.பி.எப்) கமிஷனர் அஷ்ரப் உள்பட அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். இதையடுத்து ரெயில் நிலைய 1-வது நடைமேடையில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டனர். போலீஸ் உயர் அதிகாரிகள் சம்பவம் பற்றி தீவிர விசாரணை நடத்தினர். கைரேகை நிபுணர்களும் சோதனை மேற்கொண்டனர். போலீசார் ஆய்வு ஓடும் ரெயிலில் மேற்கூரையில் துளைபோட்டு பணத்தை கொள்ளையடித்திருந்த சம்பவம் போலீஸ் வட்டாரத்தில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சினிமா பாணியில், தமிழகத்தில் இப்படி ஒரு கொள்ளை முதன் முறையாக அரங்கேறி இருப்பது குறித்து தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டது. உடனடியாக ரிசர்வ் வங்கி மற்றும் பணத்தை கொண்டு வந்த வங்கி அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். கொண்டு வரப்பட்ட மொத்த பணத்திற்கான ஆவணங்களை போலீசார் ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து பெட்டிகளில் உள்ள ரூபாய் நோட்டுகள் எண்ணப்பட்டன. அந்த வகையில் ரூ.5.78 கோடி அளவில் கிழிந்த, நைந்து போன ரூபாய் நோட்டுகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது. மீதமுள்ள ரூபாய் நோட்டுகள் வங்கி அதிகாரிகள்-போலீசார் முன்னிலையில் எண்ணப்பட்டன. இந்த பணி நேற்று இரவு வரை நீடித்தது. தனிப்படைகள் போலீசார் பாதுகாப்புக்கு இருந்தும் ரெயிலின் மேற்கூரை உடைக்கப்பட்டு பணம் கொள்ளையடிக்கப்பட்டது, ஒட்டுமொத்தமாக போலீசாரின் மெத்தனத்தையே காட்டுவதாக அமைந்துள்ளது. போலீசாருக்கே தண்ணி காட்டும் விதமாக நடந்த இந்த கொள்ளை சம்பத்தில் ஈடுபட்டவர்களை பிடிப்பதற்காக ரெயில்வே எஸ்.பி. விஜயகுமார் தலைமையில் 3 டி.எஸ்.பி.க்கள் அடங்கிய தனிப்படை அமைக்கப்பட்டது. இதுதவிர சென்னை நகர ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் ஒவ்வொருவர் தலைமையிலும் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. திருச்சி ரெயில்வே போலீஸ் எஸ்.பி. ஆனி விஜயா தலைமையிலும் தனிப்படை முடுக்கிவிடப்பட்டு உள்ளது. ரெயில் நிலையத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து, முதற்கட்ட விசாரணையை இந்த வகையில் தொடங்க போலீசார் முடிவு செய்துள்ளனர். வங்கி அதிகாரிகளிடம் விசாரணை பணத்தை வங்கிகள் பாதுகாப்பாக கொண்டு வரும் செய்தியை கொள்ளையர்கள் முன்கூட்டியே அறிந்துள்ளனர். மேலும் நீண்டநாட்களாவே பணம் கொண்டு வரும் நாளை எதிர்பார்த்து காத்திருந்துள்ளனர். இந்த நிலையில் ரெயில் மூலம் பணம் கொண்டு செல்லும் விஷயத்தை, எப்படியோ கொள்ளையர்கள் அறிந்து துல்லியமாக திட்டம் போட்டுள்ளனர். வங்கியில் இருந்து பணம் எடுத்து சென்றதில் இருந்து, ரெயிலில் ஏற்றப்பட்டது வரை, ரகசியமாக பின்தொடர்ந்து கண்காணித்துள்ளனர். பின்னர் ஏற்கனவே தீட்டிய திட்டத்தின்படி பணத்தை சவால் விடும் வகையில் கொள்ளையடித்துள்ளனர். எனவே வங்கி அதிகாரிகள் மற்றும் ஊழியர்களிடமும் இது குறித்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையே பணம் கொள்ளை போனது குறித்து ரிசர்வ் வங்கியின் துணை மேலாளர் நடராஜன் எழும்பூர் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசில் புகார் அளித்து உள்ளார். புதுமையான கொள்ளை ரெயில் பயணங்களின் போது கொள்ளை சம்பவங்கள் அடிக்கடி நடப்பது உண்டு. ஓடிய ரெயிலில் இருந்து பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிப்பது, பயணிகள் தூங்கும் போது கொள்ளையடிப்பது உள்பட சம்பவங்கள் தான் அதிகம் நடக்கும். ஆனால், முதல் முறையாக ஓடுகிற ரெயிலில் மேற்கூரை உடைக்கப்பட்டு நடந்தேறிய இந்த புதுமையான கொள்ளை சம்பவம் பயணிகள், போலீசார் மட்டுமல்லாது தமிழகத்தையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது. ‘ஹாலிவுட்’ திரைப்படங்களில் தான் ஓடும் ரெயிலில் கொள்ளை, கப்பலில் கொள்ளை என அசாத்திய நிகழ்வுகள் காட்சிகளாக்கப்படும். ஆனால் அப்படி ஒரு நிகழ்வு உண்மையிலேயே நடந்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. – See more at: http://www.tamilvoice.com/news/india/1585#sthash.oHIYvnmo.dpuf

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply