ரவை போண்டா

Loading...

ரவை போண்டா
தேவையான பொருட்கள்:


போண்டாவிற்கு…

வெள்ளை ரவை – 100 கிராம்
கெட்டித் தயிர் – 200 கிராம்
துருவிய தேங்காய் – 1/2 கப்
பச்சை மிளகாய் – 1
பெரிய வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது)
கறிவேப்பிலை – சிறிது (பொடியாக நறுக்கியது)
பெருங்காயத்தூள் – 1/2 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
இஞ்சி – சிறிது (பொடியாக நறுக்கியது)


சட்னிக்கு…

வேர்க்கடலை – 100 கிராம்
தேங்காய் துருவல் – 100 கிராம்
பூண்டு – 6 பல்
காய்ந்த மிளகாய் – 5
உப்பு – தேவையான அளவு


தாளிக்க…

கடுகு – 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை – தாளிக்க
எண்ணெய் – தாளிக்க


செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் ரவை மற்றும் தயிரை ஊற்றி நன்கு கலந்துக் கொள்ளவும். பின்னர், அதில் தேவையான பொருட்கள் அனைத்தையும் சேர்த்து நன்கு பிரட்டிக் கொள்ளவும். அதனை ஒரு 10 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

அந்த கலவையை முதலில் பிரட்டும் பொழுது தண்ணீர் கூடுதலாக இருக்கும். ஆனால், 10 நிமிடம் ஊறிய பிறகு ரவை தயிரில் ஊறி சிறிது பெரிதாகும். பின்னர், தண்ணீர் சரியாக இருக்கும்.

10 நிமிடம் ஊறியப் பிறகு அதனை எண்ணெய்யில் பொரித்து எடுத்தால் சுவையான ரவை போண்டா தயார்….

இப்பொழுது சட்னி எப்படி செய்வது என்று பார்ப்போம்….

ஒரு மிக்ஸியில் வேர்க்கடலை, துருவிய தேங்காய், பூண்டு, காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து நன்கு அரைக்க வேண்டும்.

இறுதியாக, ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி, கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து அரைத்த சட்னியில் சேர்த்தால் சுவையான வேர்க்கடலை சட்னி போண்டாவுடன் சாப்பிட தயார்

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply