மொபைல் போன் சேவையை சீர்குலைக்க முயற்சி

Loading...

மொபைல் போன் சேவையை சீர்குலைக்க முயற்சிமொபைல் போன் சேவையை சீர்குலைக்க, இதர மொபைல் போன் சேவை நிறுவனங்கள் முயற்சிக்கின்றன என, ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், தொலைதொடர்பு ஒழுங்கு முறை ஆணையமான – டிராய் இடம் புகார் அளித்துள்ளது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் குழுமத்தைச் சேர்ந்த, ஆர்ஜியோ என சுருக்கமாக அழைக்கப்படும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், விரைவில், மொபைல் போன் சேவையை அதிகாரபூர்வமாக துவக்க உள்ளது.
இதையொட்டி, கடந்த, 2015 டிசம்பர் முதல், சோதனை அடிப்படையில், மொபைல் போன் சேவையை வழங்கி வருகிறது. ரிலையன்ஸ் குழுமத்தினருக்கு வழங்கப்பட்ட இச்சேவை, சமீபத்தில் பொதுமக்களுக்கும் விரிவு படுத்தப்பட்டது. ஆர்ஜியோ மொபைல் போன் சேவையை, 15 லட்சம் பேர் பயன்படுத்தி வருகின்றனர்.
இதையடுத்து, ஆர்ஜியோ சோதனை சேவை என்ற போர்வையில், முழுமையான தொலை தொடர்பு சேவைகளை வழங்குவதால், தங்கள் வாடிக்கையாளர்களின் தொலை தொடர்பு இணைப்புகள் பாதிக்கப்படுவதாக, மொபைல் போன் சேவை நிறுவனங்களின் கூட்டமைப்பான – சி.ஓ.ஏ.ஐ., டிராய் இடம் புகார் அளித்துள்ளது.
இதையடுத்து, ஆர்ஜியோ, டிராயிடம் அளித்துள்ள மனுவில்: டிராய் விதிமுறைகளின் படி, உரிய அனுமதியுடன், ஆர்ஜியோ சோதனை அடிப்படையில் மொபைல் போன் சேவை வழங்குகிறது.
ஆனால், சி.ஓ.ஏ.ஐ., உள்நோக்கத்துடன், உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளது. மொபைல் போன் சேவைக்காக, 1.34 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், 1.50 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்யப்பட உள்ளது. தரத்திலும், கட்டணத்திலும், உலகளவில் இணையற்ற மொபைல் போன் சேவையை ஆர்ஜியோ வழங்க உள்ளது.
இந்நிலையில், தொலை தொடர்பு சேவைக்கான ஒருங்கிணைப்பு முனையத்தில், போதுமான அலைவரிசையை, மொபைல்போன் சேவை நிறுவனங்கள், ஆர்ஜியோவுக்கு வழங்கவில்லை.
இதனால், ஆர்ஜியோ வாடிக்கையாளர்கள், பிற மொபைல் போன் சேவை நிறுவன வாடிக்கையாளர்களை தொடர்பு கொள்ளும் போது, இணைப்பு துண்டிக்கப்படுகிறது. கிடைக்கும் இணைப்பும், தரமற்றதாக உள்ளது.
இப்பிரச்னைக்கு டிராய் தீர்வு காண வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. ஆர்ஜியோவின் வருகை, இந்திய மொபைல் போன் சந்தையில் கடும் போட்டியை உருவாக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisements
Loading...
Rates : 0
Loading...
VTST BN
Loading...

Leave a Reply