மேத்தி சிக்கன் ஃப்ராங்க்ஸ் மசாலா

Loading...

மேத்தி சிக்கன் ஃப்ராங்க்ஸ் மசாலா
தேவையான பொருட்கள்:

சிக்கன் ஃப்ராங்க்ஸ் – 4
வெங்காயம் – 1
தக்காளி – 1
பச்சை மிளகாய் – 2
வெந்தயக்கீரை / மேத்தி(காம்புகள் நீக்கியது) – ஒரு கைப்பிடி
இஞ்சி பூண்டு விழுது – 1/2 தேக்கரண்டி
மிளகாய்ப்பொடி – 3 தேக்கரண்டி
மல்லிப்பொடி – 2 தேக்கரண்டி
மஞ்சள்பொடி – 1/2 தேக்கரண்டி
கரம் மசாலாப்பொடி – 1 தேக்கரண்டி
தேங்காய் துருவியது – 4 மேசைக்கரண்டி
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு
கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – தேவையான அளவு
வெங்காயத்தாள் – அலங்கரிக்க

செய்முறை:

சிக்கன ஃப்ராங்க்ஸ்களைச்சிறு துண்டுகளாக வட்டமாக நறுக்கிக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் விட்டு, சிக்கன்ஃப்ராங்க்ஸ் துண்டுகளைக் கொஞ்சம் நிறம் மாறும் வரை வறுத்தெடுத்துத் தனியே வைக்கவும். வறுத்ததும், நன்றாக உப்பி வரும்
எண்ணெய் தேவைப்பட்டால் இன்னும் சிறிது ஊற்றி, வெங்காயம் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் நிறம் மாறியதும், இஞ்சி பூண்டு விழுதைச் சேர்த்து வதக்கவும்.
சிறுதுண்டுகளாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய்,கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய மல்லித்தழைசேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும், மல்லிப்பொடி, மிளகாய்ப்பொடி, மஞ்சள்பொடி, கரம் மசாலாப்பொடி, உப்பு சேர்த்து வதக்கவும்.
கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மூடி வைக்கவும்.
மசாலா வெந்ததும், அரைத்த தேங்காய் விழுதைச் சேர்த்து வதக்கவும்.
ஒரு சின்ன வாணலியில் / தாளிக்கும் கரண்டியில் ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி, வெந்தயக்கீரையைச் சற்றே முறுகலாக வறுத்தெடுத்து மசாலாவுடன் சேர்க்கவும். பச்சையாகச் சேர்ப்பதைவிட, வறுத்துச் சேர்த்தால் வெந்தயக்கீரை வாசம் நன்றாக இருக்கும்.
சிக்கன் ஃப்ராங்க்ஸ் துண்டுகளைச் சேர்த்து 2 நிமிடங்கள் வதக்கி இறக்கவும்.

குறிப்பு:

சாதத்துடன் பிசைந்து சாப்பிட, ரசம் / பருப்பு / சாம்பார் சாதத்துடன் சாப்பிட, சப்பாத்தியுடன் சாப்பிடச் சுவையாக இருக்கும்.
ஃபிராங்க்ஸ்க்குப் பதிலாக சிக்கன் சாஸேஜும் பயன்படுத்தலாம்.

Loading...
Rates : 0
VTST BN