மூளையின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் உடல் நிறை

Loading...

மூளையின் செயற்பாட்டில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் உடல் நிறைமனிதனின் அன்றாட செயற்பாட்டில் மூளை முக்கிய இடத்தைப் பெறுகின்றது என்பதை அறிந்திருப்பீர்கள்.
ஆனால், அந்த மூளையின் செயற்பாட்டில் உடல் நிறை பாரிய தாக்கத்தை ஏற்படுத்துகின்றது என்பதை அறிவீர்களா?
ஆம், ஒரே வயதை உடையவர்களில் உடல் நிறை குறைந்த ஒருவருடைய மூளையின் செயற்பாட்டினை விட உடல் நிறை கூடிய ஒருவரின் மூளையின் செயற்பாட்டில் 10 வருடங்கள் முதுமை அடைந்த அறிகுறிகள் காணப்படும் என ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
கேம்பிரிஜ் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்ட ஆய்விலேயே இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
இந்த ஆய்விற்காக 20 தொடக்கம் 87 வயதிற்கு உட்பட்ட 527 நபர்கள் பயன்படுத்தப்பட்டுள்ளனர்.
இதில் 50 வயதை எட்டியிருந்ததுடன், அளவுக்கு அதிகமான எடையினைக் கொண்டிருந்தவர்கள் 60 வயதினருக்கு ஏற்ற செயற்பாடுகளைக் கொண்டிருந்தாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இவ் ஆய்வின் போது இவர்களிடத்தில் வழமைாயான சில நுண்ணறிவுக் கேள்விகளும் தொடுக்கப்பட்டிருந்தன.

Loading...
Rates : 0
VTST BN