முருங்கை கீரை கார அடை | Tamil Serial Today Org

முருங்கை கீரை கார அடை

முருங்கை கீரை கார அடை
தேவையான பொருட்கள் :

கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு – தலா கால் கிலோ,
குதிரைவாலி அரிசி, சாமை அரிசி, வரகு அரிசி – தலா கால் கிலோ,
முழு கருப்பு உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை – தலா 4 டீஸ்பூன்,
வெங்காயம், இஞ்சி, பூண்டு, முருங்கை கீரை, உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.


செய்முறை:

* கம்பு, கேழ்வரகு, சோளம், கொள்ளு, பாசி பயறு, உளுந்தம் பருப்பு, கொண்டைக்கடலை, குதிரை வாலி அரிசி, சாமை அரிசி, வரகரிசி இவை அனைத்தையும் காலையில் முதல் மாலை வரை தண்ணீரில் ஊறவைக்கவும்.
* ஊறியதும், இரவு ஒரு வெள்ளைத் துணியில் கட்டிவைக்கவும். காலையில் முளை கட்டி இருக்கும் கலவையை இஞ்சி, பூண்டு, உப்பு, வெங்காயத்துடன் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
* அரைத்த மாவை உப்பு சேர்த்து கரைத்து 1 மணிநேரம் அப்படியே வைக்கவும்.
* தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் விட்டு மாவை அடையாக ஊற்றி அதன் மேல் முருங்கைக் கீரையைத் தூவி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறம் சுட்டு எடுக்கவும்.
* சிறுதானிய முருங்கை கீரை கார அடை ரெடி.

Loading...
Rates : 0
VTST BN